அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் வேக மாக உயர்ந்து வருகிறது. இத னால் அமராவதி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் எச்ச ரிக்கையாக இருக்குமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். திருப்பூர் மாவட்டம், உடுமலையில் உள்ள அமராவதி அணையின் மூலம் திருப் பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் பழைய ஆயக்கட்டு மற்றும் புதிய ஆயக்கட்டு என சுமார் 54,634 ஏக்கர் விவசாய நிலங்களும், ஆயிரக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது. அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழையால் அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. திங்கட்கி ழமை காலை நிலவரப்படி அணையின் மொத்த கொள்ளளவு 90 அடியில், தற்போது நீர் இருப்பு 85.31 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 992 கன அடி நீர் வருகிறது. மேலும் அணையின் நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வரு வதால், அணையில் இருந்து உபரி நீர் ஆற்றில் திறந்துவிடப்படும் என்பதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகா ரிகள் விடுத்துள்ள அறிக்கையில், அமரா வதி அணைக்கு வரும் தண்ணீர் அளவு தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுகிறது. அணையின் நீர் மட்டம் 88 அடியாக உயரும் போது பாதுகாப்பு கருதி அணையில் இருந்து உபரி நீர் அமராவதி ஆற்றில் 2 ஆயிரம் கன அடி முதல் 3 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் திறந்துவிடப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?