சேலம் மாவட்டம், வாழப்பாடி தாலுகாவில் உள்ள புழு திக்குட்டை கிராமத்தில், மலைவாழ் மக்களுக்கான இலவச மருத்துவ முகாம் ஞாயிறன்று நடைபெற்றது. மக்கள் நல்வாழ்வுக்கான மருத்துவர் அரங்கம், குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கம் மற்றும் தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய முகாமிற்கு, பேராசிரியர் மருத்துவர் கருணாகரன் தலைமை வகித்தார். தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்க மாநிலப் பொருளாளர் வழக்குரைஞர் திருப்புகழேந்தி வரவேற்புரையாற்றினார். இதில்,விவேகானந்தா மருத்து வக் கல்லூரி முதல்வர் டாக்டர் முருகேசன் முகாமின் நோக்கத் தை விளக்கி உரையாற்றினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலத் தலைவர் முனைவர் திருநாவுக்கரசு, மக்கள் நல் வாழ்வுக்கான மருத்துவ அரங்கத்தைச் சேர்ந்த மருத்து வர்கள் சிற்றரசு, பல் மருத்துவர் கார்த்திக் கண்ணன், மற்றும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தைச் சேர்ந்த சேட்டு ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர். இம்முகாமில், தோல் மருத்துவம், பல் மருத்துவம், கண் பரிசோதனை, இரத்த சர்க்கரைப் பரிசோதனை, இரத்த அழுத் தம் அளவிடுதல், மற்றும் பொது மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் பங்கேற்று சிகிச்சை அளித்தனர். புழுதிக்குட்டை கிராமத்தைச் சுற்றியுள்ள மலைக் கிரா மங்களில் இருந்து சுமார் 100-க்கும் மேற்பட்டோர் முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர். முடிவில், தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன் னேற்ற சங்க மாவட்டப் பொருளாளர் தினகரன் நன்றி கூறி னார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?