ஒரு லிட்டர் மண்ணெண்ணைக்காக மாற்றுத்திறனாளி அலைக்கழிப்பு

ஒரு லிட்டர் மண்ணெண்ணைக்காக மாற்றுத்திறனாளி அலைக்கழிப்பு

உதகை அருகே உள்ள பிங்கர் போஸ்ட் வீராசாமி லைனில் வசித்து வரும் மாற்றுத்திற னாளி. கடந்த மூன்று மாதங்களாக ரேஷன் கடையில் வழங்கப்பட வேண்டிய ஒரு லிட் டர் மண்ணெண்ணெய் மறுக்கப்பட்டதால், ஆட்சியரிடம் முறையிட படிக்கட்டில் ஊர்ந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ளது. நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள பிங்கர் போஸ்ட் வீராசாமி லைனில் வசித்து வரும் மாற்றுத்திறனாளி கிருஷ்ணன், அப் பகுதியில் உள்ள ரேசன் கடையில் அத்தியாவ சியப் பொருட்களை பெற்று வருகிறார். அவ ருக்கு மாதந்தோறும் ரேசன் அட்டையின் கீழ் வழங்கப்படும் ஒரு லிட்டர் மண்ணெண் ணெயை, கடந்த மூன்று மாதங்களாக கடை ஊழியர் வழங்க மறுத்து, பல்வேறு கார ணங்களைக் கூறி தட்டிக் கழித்ததாக தெரி கிறது. இதனால் பாதிக்கப்பட்ட கிருஷ்ணன், தனது புகார் மனுவுடன் ஆட்சியர் அலுவல கத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வந்தார். எழுந்து நடக்க முடி யாத நிலையிலும், அவர் படிக்கட்டு வழியாக ஊர்ந்து சென்று ஆட்சியரை சந்திக்க முற்பட் டார். இதைக் கண்ட உதகை வட்ட வழங் கல் அலுவலகத்தைச் சேர்ந்த பெண் ஊழி யர் ஒருவர், மாற்றுத்திறனாளி கிருஷ்ணனை அணுகி விசாரணை நடத்தினார். உடனடி யாக, ரேஷன் கடை ஊழியரைத் தொலை பேசி மூலம் தொடர்பு கொண்டு, புகார் மனு குறித்து தெரிவித்து, ஆட்சியர் அலுவலகத் திற்கு வருமாறு உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து, அதிகாரிகள் முன் னிலையில் விசாரணை நடத்தப்பட்டது. அத்தி யாவசியப் பொருளான ஒரு லிட்டர் மண் ணெண்ணெய்க்காக, ஒரு மாற்றுத்திறனாளி நபரை மூன்று மாதங்களாக அலைக்கழித்த ரேஷன் கடை ஊழியரை உயர் அதிகாரி கடுமையாக எச்சரித்து அனுப்பினார். இதுகுறித்து வட்டாட்சியர் குப்பு சாமி செய்தியாளர்களிடம் பேசுகை யில், “சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளி நப ருக்கு நிலுவையில் உள்ள மூன்று மாதங்க ளுக்கான மூன்று லிட்டர் மண்ணெண்ணெ யும், தமிழக அரசின் தாயுமானவர் திட்டத் தின் கீழ் உடனடியாக வழங்க உரிய நட வடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%