ரூ.99 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள், மீன் இறங்குதளம், மீன் விதைப் பண்ணை: ஸ்டாலின் திறந்தார்

ரூ.99 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள், மீன் இறங்குதளம், மீன் விதைப் பண்ணை: ஸ்டாலின் திறந்தார்



முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று தலைமைச் செயலகத்தில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் 98 கோடியே 92 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள், மீன் இறங்குதளம் மற்றும் புதிய மீன் விதைப் பண்ணை ஆகியவற்றை திறந்து வைத்தார்.


கன்னியாகுமரி மாவட்டம், தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் 60 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ள கூடுதல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பெரியநாயகி தெரு மீனவ கிராமத்தில் 26 கோடி ரூபாய் செலவில் தூண்டில் வளைவுடன் மேம்படுத்தப்பட்ட மீன் இறங்குதளம், மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் 10 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகம், தென்காசி மாவட்டம், கடானா கிராமத்தில் 2 கோடியே 92 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அரசு மீன் விதைப் பண்ணை; மொத்தம் 98 கோடியே92 லட்சம் ரூபாய் செலவில் 4 முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் திறந்து வைத்தார்.


கடானா மீன் விதைப் பண்ணை


தென்காசி மாவட்டம், கடானா அரசு மீன் விதைப் பண்ணையில் மீன் வளர்ப்பு தொட்டிகள் மற்றும் இதர உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டதால் வருடத்திற்கு 5 இலட்சம் மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்து உள்நாட்டு மீன்வளத்தை உயர்த்த இயலும்.


இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் ந.கௌதமன், மீனவர் நல வாரியத் தலைவர் அ. ஜோசப் ஸ்டாலின், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், மீனவர் நலத்துறை செயலாளர் என்.சுப்பையன், மீனவர் நலத்துறை இயக்குநர் கே.வி.முரளிதரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%