உண்மை உறங்குவதில்லை

உண்மை உறங்குவதில்லை



உண்மை உறங்குவதில்லை

மயக்க மருந்து கொடுத்துச்

சாய்த்தாலும் அது 

நாக்கில் தீயாய் திரும்பும்!


நாடு உங்கள் சொத்து அல்ல,

ஆனால் நீங்களதை 

அடகு வைத்தீர்கள்

அதிகார வட்டிக்காக!


சட்டம் உங்கள் கையில்

சுருட்டிய பத்திரம்!

தேவையெனில் நீதி!

இல்லையெனில் தூசி!


பசியை

“புள்ளிவிவரம்” என்றீர்கள்!

சாவை

“தவிர்க்க முடியாதது” என்றீர்கள்!

திருட்டை

“நிர்வாகப் பிழை” என்றீர்கள்!


வாக்குறுதிகளை விற்று

வாக்குகளை வாங்கி

நாட்டின் முதுகெலும்பை

படிப்படியாக நொறுக்கினீர்கள்!


கேள்வி கேட்டால்

தேச விரோதம்!

குரல் கொடுத்தால்

அமைதிக்குக் களங்கம்!


நீங்கள் கட்டிய 

ஒவ்வொரு கோபுரமும்

ஏழையின் எலும்பில் 

உண்டானது!

அதிர்வில் குலுங்கும்

கோபத்தில் சிதறும்!


நீதியை வரிசையில் நிறுத்தி

காலம் இழுத்த 

ஒவ்வொரு நாளும்

ஒரு குற்றம் அரசாணையால் 

தப்பியது!


நினைவில் வையுங்கள்

வரலாறு உங்களைப் 

பேட்டி எடுக்காது,

விசாரணைதான் செய்யும்!


அப்போது பதவி இருக்காது!

பாதுகாப்பு இருக்காது!

கொடி இருக்காது!

ஒன்று மட்டுமிருக்கும்

உங்கள் தீவினைகளின் எச்சம்!


உண்மை உறங்காது 

எரியும்!...எரியும்!

------

முகில் தினகரன்

கோயமுத்தூர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%