உ.பி. மாநிலத்தில் சோதனையின் போது சங்கூர் பாபா டைரி சிக்கியது

உ.பி. மாநிலத்தில் சோதனையின் போது சங்கூர் பாபா டைரி சிக்கியது

புதுடெல்லி:

நே​பாள எல்​லையை ஒட்டி அமைந்​துள்ள பல்​ராம்​பூரில் உள்ள ரெஹ்ரா மாபி கிராமத்தை சேர்ந்​தவர் சங்​கூர் பாபா என்று அழைக்​கப்​படும் ஜமாலுதீன். இவர், மதமாற்ற கும்​பலுக்கு மூளை​யாக செயல்​பட்​டதையடுத்து இவருக்கு வெளி​நாடுகளிலிருந்து பல கோடி ரூபாய் நிதி உதவி கிடைத்தது.


பட்​டியல் சாதி​யினர் மற்​றும் பொருளா​தா​ரத்​தில் நலிவடைந்த நிலை​யில் உள்ள நபர்​களை குறி​வைத்து சட்​ட​விரோத மதமாற்ற நடவடிக்​கை​யில் சிங்​கூர் பாபா ஈடு​பட்​டதையடுத்து அவர் லக்​னோ​வில் உள்ள ஒரு ஹோட்​டலில் நீத்து என்​கிற நஸ்​ரின் என்ற பெண்ணுடன் ஜூலை 5-ம் தேதி கைது செய்​யப்​பட்​டார்.


சிங்​கூர் பாபா உள்​ளிட்​டோர் மீது ஏடிஎஸ் வழக்கு பதிவு செய்​தது. சில நாட்​களுக்கு முன்பு ஏடிஎப் நடத்​திய சோதனை​யில் சிங்​கூர் பாபா​விடம் இருந்து முக்​கிய டைரி ஒன்று கைப்​பற்​றப்​பட்​டுள்​ளது.


இதில் 2022-ல் நடை​பெற்ற உ.பி. தேர்​தலின்​போது பாபா​விடம் இருந்து பணம் பெற்ற பல அரசி​யல்​வா​தி​கள் மற்​றும் முக்​கிய அதி​காரி​களின் பெயர்​கள் இடம்​பெற்​றுள்​ள​தாக கூறப்​படு​கிறது. கடந்த, 2022 தேர்​தலுக்​கான உத்​ர​வுலா தொகு​தி​யின் முன்​னாள் வேட்​பாளர் ஒரு​வருக்கு ரூ.90 லட்​சம் பணம் கொடுக்​கப்​பட்​ட​தாக சிங்கூர் பாபா டைரி​யில் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%