ஏகே - 203 ரக நவீன துப்பாக்கிகள் உ.பி. அமேதியில் தயாரிப்பு

ஏகே - 203 ரக நவீன துப்பாக்கிகள் உ.பி. அமேதியில் தயாரிப்பு

அமேதி:

உத்தர பிரதேசம் அமேதி தொகு​தி​யில் இந்​தி​யா-ரஷ்யா நிறு​வனங்​கள் கூட்​டாக தயாரிக்​கும் துப்​பாக்கி தொழிற்​சாலை (ஐஆர்​ஆர்​பிஎல்) உள்​ளது.


இங்கு ஏ.கே.203 ரக துப்​பாக்​கி​கள் தயார் செய்​யப்​படு​கின்​றன. இதற்கு ‘ஷேர்’ என பெயரிடப்​பட்​டது. இந்த துப்​பாக்கி ஒரு நிமிடத்​தில் 700 குண்​டு​களை, 800 மீட்​டர் இலக்​கு​வரை சுடு​கிறது. இந்த நிறு​வனத்​தில் ராணுவத்​தின் முப்​படைகளுக்கு 6 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட ஏ.கே.203 ரக துப்​பாக்​கி​களை வழங்க ரூ.5,200 கோடிக்கு ஒப்​பந்​தம் வழங்​கப்​பட்​டது.


இது​வரை இந்​நிறு​வனம் 48,000 துப்​பாக்​கி​களை விநி​யோகித்​துள்​ளது. அடுத்த 3 வாரங்​களில் 7,000 துப்​பாக்​கி​கள் விநியோகிக்கப்படவுள்​ளன. இந்​தாண்டு இறு​திக்​குள் மேலும் 15,000 துப்​பாக்​கி​கள் விநி​யோகிக்​கப்​பட​வுள்​ளன.


இந்த ஏ.கே.203 ரக துப்​பாக்​கி​கள், ஏ.கே-47 மற்​றும் ஏகே-56 துப்​பாக்​கி​களை விட மிக​வும் நவீன​மானவை. பாது​காப்​புத்​துறை​யில் கடந்த 30 ஆண்​டு​களுக்கு மேலாக பயன்​படுத்​தப்​படும் இன்​சாஸ் ரக துப்​பாக்​கி​கள் 4.15 கிலோ எடை​யும் 960 எம்​எம் நீளமும் கொண்டவை.


ஆனால், இந்த ஏகே-203 ரக துப்​பாக்கி 3.8 கிலோ எடை​யுட​னும், 705 எம்​எம் நீளத்​தி​லும் இருப்​ப​தால் வீரர்​களால் எளி​தாக கையாள முடி​யும். இந்​தி​யா- பாகிஸ்​தான் எல்​லை​யில் பாது​காப்பு பணி​யில் ஈடு​படும் வீரர்​களுக்கு இந்த துப்​பாக்​கி​கள் வழங்​கப்​படவுள்​ளன.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%