இரண்டு தினங்க
ளாக நகரமே பர பரப் பாக இருந்தது. பரபரப்புக்கு காரணம்
ரயில்வே நிலையம்,
காவல் நிலையம், மருத்துவமனை, பேருந்து நிலையம் மற்றும் பிரபலங்களின் வீடுகள் இங்கெல்லாம் வெடிகுண்டு வைத்துள்ளோம் என்ற தகவலால் மக்கள் பீதியடைந்துள்ள நிலையில் சிறப்புப் புலனாய்வுத்துறை
யினர் மோப்பநாய் கொண்டும் கருவிகள் மூலமாகவும் வெடிகுண்டு வைத்துள்ளதாக தகவல் கிடைத்த இடங்களிலெல்லாம் ஆய்வுச் செய்துக் கொண்டிருந்தனர்.
ஊடகங்கள் அனைத்திலும் தலைப்புச் செய்தியாகவும், முக்கிய செய்தியாகவும்,பரபரப்புச் செய்தியாகவும் வெடிகுண்டு செய்தி நான்கு திசைகளிலும்
வெடித்துச் சிதறிக்
கொண்டிருந்தது.
ரயில் நிலையம்,
பேருந்து நிலையம், கடைவீதி இங்கெல்லாம் மக்கள் கொண்டு வரும் பெட்டி, மற்றும் பைகளை காவல்துறையினர் சோதனை செய்துக் கொண்டேயிருந் தனர்.
பேருந்து, ரயில் இவற்றிலிருந்து அவசர, அவசரமாக
வந்து இறங்கி பல்வேறு வேலை
களுக்கு செல்லும் பயணிகள் இந்த சோதனைக்குள்ளா வதை நினைத்து மிகுந்த வேதனை அடைந்தனர்.
என்ன செய்வது? வதந்திகள் தானே மக்களையும், அரசாங்கத்தையும் ஆட்டிவைக்கிறது.!
அதுவும் வெடிகுண்டு என்றால் சும்மாவா? அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை ஆடித்தானேப் போகிறார்கள்!
சிலநாட்களுக்கு முன்பு அமைச்சர் ஒருவர், அரசாங்க விழா ஒன்றில் கலந்து கொள்ள அதிகாரிகள் புடைசூழ ஆடிக்காரில் சென்றுகொண்டிருந்தார்.
அமைச்சர் செல்லும் காரில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைக்க , அமைச்சரின் காரை புலனாய்வுத்துறையினர் வழிமறித்து அமைச்சரை வேறு ஒரு காரில் அனுப்பி வைத்தனர்.
இப்படியான நிலையில், பேருந்து நிலையத்தில் வந்து நின்ற பேருந்தி ஒன்றிலிருந்து பயணிகள் இறங்கி கொண்டிருந்தனர்.
அந்த பேருந்திலிருந்து வேட்டி சட்டை அணிந்த நிலையில் கையில் கனமான சாக்குப் பையுடன் இறங்கிக் கொண்டிருந்த பயணி ஒருவரை காவலர்கள் மூன்று பேர் அப்படியே சுற்றி சூழ்ந்தவாறு, பேருந்து நிலையத்துக்குள் அழைத்துச் சென்றனர் .
கண்ணாடி அணிந்திருந்த அவருக்கு சுமார் 60 வயது இருக்கும்.
மெல்லிய தேகம் கொண்ட அவரை காவலர்கள் மிரட்டியபடி இருந்தனர்.
பையில என்னா இருக்கு?
என்னா வியாபாரம் பண்றீங்க? எங்கிருந்து வரீங்க?
இவ்வளவு கேட்குறோம்? பதில் சொல்லுங்க!
பைக்குள்ள என்ன வச்சிருக்குங்க... பையை இப்படி கொடுங்க... என்றபடி அவர் வைத்திருந்த அந்த கனமான பையை காவலர் ஒருவர் பிடுங்க முற்பட்டார்.
ஆனால் அவர் பையை கொடுக்கவில்லை. அந்த முதியவர், அய்யா... நான் எழுத்து வியாபாரம் பண்றேன் என்றார்...
என்னய்யா... கிண்டல் பண்றே...! எழுத்து வியாபாரம்னா என்ன? என்று இன்ஸ்பெக்டர் அதட்டினார்...
எழுத்து வியாபாரம்னா உங்களுக்கு புரியலயா...! நான் ஒரு எழுத்தாளன்... நான் எழுதுற கதை, கவிதைகளை புத்தகமா அச்சடிச்சு, அந்த புத்தகங்களை நானே
புத்தகம் விக்கிற கடைக்கு நேரடியா கொண்டு போய் கொடுத்துட்டு வருவேன்... இந்த பையில வெறும் புத்தகங்கள்தான் இருக்கு... நீங்களே திறந்து பாருங்கள் என்று சொல்லியபடியே தான் கையில் வைத்திருந்த பையை திறந்து காண்பித்தபடி தனது விசிட்டிங் கார்டையும் இன்ஸ்பெக்டரிடம் எடுத்து நீட்டினார் எழுத்தாளர் இலக்கியவாசன்.. .. !
+++++++++++++
ஆக்கம்:
தமிழ்ச் செம்மல்
நன்னிலம் இளங்கோவன்.