அறுசீர் மண்டிலம்.
கல்வி இல்லாரைக்
கண்டறிவோம்
கருத்தாய்க் கல்விதனைத்
தந்திடுவோம்!
வல்ல முறையினிலே
நல்கிடுவோம்
வண்ணக் கல்விதனைத்
தந்திடுவோம்!
சொல்லும் வகையினிலே
சீர்செய்வோம்
சோர்வே இல்லாமல்
பார்த்திடுவோம்!
நல்ல நூல்களையே
கண்டிடுவோம்
நாளும் பயனாக்கி
மகிழ்ந்திடுவோம்!
(வேறு)
கல்வி என்பதொரு
வானம்
கனிவாய்க் கற்றிடத்தான்
வேணும்!
நல்ல ஒழுக்கத்தை
நல்கும்
நாளும் வழக்கத்தைச்
சொல்லும்!
பொல்லாப்பு அனைத்தையுமே
நீக்கும்
பூரிப்பாய் அன்பைத்தான்
தேக்கும்!
வெல்ல உதவிடுமே
கல்வி
வீறு கொண்டிடுவோம்
சொல்லி!
*முனைவர்*
*இராம.வேதநாயகம்*
திருவண்ணாமலை.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%