(வெண்கலிப்பா)
சிவகங்கைச் சீமையர்
சீர்மருது பாண்டியர்
உவகையுடன் வெள்ளையரை
ஊர்விட்டுத் துரத்திடப்
பாடுபட்டார் ஆயுதத்தைப்
பாங்காய்ப் பயன்படுத்தி!
கேடுசெய்தார் ஆங்கிலேயர்
கெட்டபுத்தி கொண்டேதான்!
போராட்ட வீரர்கள்
பொலிவான எதிர்ப்பைத்தான்
சீரோடு செய்தாரே
சீர்மைக் குணத்தோரே!
ஒற்றுமை நல்லிணக்கம்
ஒருங்கே கொண்டவராம்
பற்றினை நாட்டிலே
பாசமாய்க் கொண்டவராம்!
அரசியல் தந்திரத்தை
ஆக்கபூர்வ சக்தியாக
முரசுகொட்டக் கண்டவராம்
மேன்மையே கொண்டவராம்!
எதிர்க்க முடியாமல்
எத்தர்கள் ஆங்கிலேயர்
பதுங்கியே எதிர்த்தார்கள்
பரங்கியர் அன்றேதான்!
ஒருங்கேதான் போராடி
ஒற்றுமையுடன் கூடியே
அரசியல் போராட்டம்
அடங்காமல் செய்தார்கள்!
ஆன்மிகச் செயல்களை
அழகாகச் செய்தாரே
பான்மையுடன் மருதிருவர்
பண்போடு செயல்பட்டார்!
*மருதிருவர்* தம்மையே
மாண்பின்றி ஆங்கிலேயர்
திருவின்றித் தூக்கிலிட்டார் தேர்!
*முனைவர்*
*இராம.வேதநாயகம்*
திருவண்ணாமலை.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?