ஒரு லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து புதிய உச்சம்
Dec 13 2025
10
சென்னை: சென்னையில் இன்று (டிசம்பர் 12) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1600 அதிகரித்து ஒரு சவரன் ரூ.98 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (டிசம்பர் 10) தங்கம் விலை கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து, 12,030 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 240 ரூபாய் அதிகரித்து, 96,240 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
வெள்ளி கிராமுக்கு 8 ரூபாய் உயர்ந்து, 207 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று (டிசம்பர் 11) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ஒரு சவரன் ரூ.96,400க்கு விற்பனை செய்யப்பட்டது.
கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,050க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.209க்கும், ஒரு கிலோ ரூ.2,09,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1600 அதிகரித்து ஒரு சவரன் ரூ.98 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.200 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,250க்கு விற்பனை ஆகிறது.
அதேபோல் வெள்ளி விலை புதிய உச்சத்தை எட்டி கிராமுக்கு ரூ.6 அதிகரித்து ஒரு கிராம் ரூ.215க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.98 ஆயிரத்தை தொட்டு புதிய உச்சம் அடைந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1 லட்சத்தை நெருங்கி வருவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?