ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது: கனமழை தொடரும்

ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது: கனமழை தொடரும்


வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை, அக். 18–


தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள் உருவாகியுள்ளதால் கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கியது. பருவமழை தொடங்கியதிலிருந்து தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் நல்ல மழைபெய்து வருகிறது. சென்னையிலும் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதோடு குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடிக்குச் சுழற்சி நிலவுகிறது.


மேலும் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில், கேரள கர்நாடக கடலோர பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.


இந்த நிலையில், அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்றும், நாளையும் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடல் லட்சத்தீவு மற்றும் கர்நாடகா, கேரளாவை ஒட்டிய தெற்கு தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் .20, 21 ஆகிய தேதிகளில் தெற்கு அரபிக்கடல் அதையொட்டிய மத்திய அரபிக்கடல் பகுதியிலும், 22-ந்தேதி அன்று தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு-மத்திய அரபிக்கடல் பகுதியிலும் மணிக்கு 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.கர்நாடகா, கோவையை ஒட்டியுள்ள தென் மாவட்ட கடலோர மீனவர்கள் இன்று முதல் 20-ந்தேதி வரையில் கடலுக்கு செல்ல வேண்டாம். 20-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை மேற்கு மத்திய அரபிக்கடலுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம்.


இதற்கிடையே தென்கிழக்கு வங்கக்கடலில் 24–ந் தேதி தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகும். இந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியானது மேற்கு திசையில் நகர்ந்து மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது . தமிழகத்தில் இன்று அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை போன்ற மேற்குத் தொடர்ச்சி மாவட்டங்களில் மிக கனமழையை எதிர்பார்க்கலாம்.


குறிப்பாக, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை தொடர வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%