ஒற்றுமை....

ஒற்றுமை....



வைகை ஆற்றங்கரை யில் கிழக்கு பக்கம் பள்ளமாக இருந்தால் ஓடையில் செல்வது போல் தண்ணீர் அமைதியாய் சென்ற வண்ணம் இருக்க ,மேற்கு மேடான பகுதியாய் இருந்ததால் மணல் வெள்ளை யாகவும் தூய்மையாகவும் இருந்தது மாலை நேரங்களில் குடும்பத்தினர் எல்லோரும் கூடி பேசி மகிழ்ந்திட ஏற்ற பொழுது போக்கு இடமாக விளங்கியது


குடி தண்ணீருக்காக பித்தளைகுடம்,செம்பு குடங்களுடன் மங்கையர்கள் வீட்டில் நடந்த நிகழ்வுகளை பேசிக் கொண்டு ஆற்று மணலை தள்ளி விட்டு ஒரு அடி ஆழத்தில் ஊற்று தோண்டி தெளிவாக வரும் தண்ணீரை ஆசை தீர குடித்துப் பார்த்து பின் குடங்களில் நிரப்பி தலையில் ஒன்றும்,இடுப்பில் ஒன்றுமாக தூக்கிக் கொண்டு ஒரு பக்கமாய் வரிசையாக செல்லும் போது பார்ப்பவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் பெண்கள் யார் வம்புக்கும் போகாமல் யாரைப் பற்றி பேசாமல் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து போவது தான் மரபாய் எண்ணி நமது பண்பாடுகளை கட்டிக் காத்தவர்கள் தங்கள் பிள்ளைகளையும் பழக்க,வழக்கங்களை கற்றுக் கொடுத்து யாரிடமும் எதையும் கை நீட்டி கேட்கக் கூடாது,பொய் பேசக் கூடாது,திருடக் கூடாது ,சண்டை சச்சரவு இல்லாமல் விட்டுக் கொடுத்து ஒற்றுமையாய் இருக்கனும்னு சொல்லி வளர்த்தாங்க, 


அதனால் தான் அன்று வ.உ.சி.,பாரதியார், முத்துராமலிங்கம்,

காமராசர்,கக்கன், அப்துல்கலாம்,

போன்றவர்கள் சாதி மத பேதமில்லவர்களாய் 

நம் நாட்டு வளத்தை வளர்த்து நாட்டையும் காக்கவும் தங்களையே தியாகம் செய்தார்கள் 

நம் தமிழ்மொழியும் காலத்தால் அழிக்க முடியாத செம்மொழியாய் வளர்ந்தது 

மக்கள் எல்லோரும் உழைத்து நேர்மையாக வாழனும் இல்லாதவர்களுக்கு கொடுத்து மகிழ்ச்சியாய் இருந்தார்கள் என்பதை யாராலும் மறுக்க முடியுமா..?

மறக்கத்தான் முடியுமா.? 



நல.ஞானபண்டிதன்

திருப்புவனம் புதூர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%