ஓசூர் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலில் ஆடிவெள்ளி உற்சவம்*
Jul 19 2025
95

வந்தவாசி , ஜூலை 20:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த ஓசூர் ஸ்ரீநிவாச பெருமாள் சன்னிதியில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ அலர்மேல் மங்கைத் தாயாருக்கு ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீகைங்கர்யம் டிரஸ்ட் சார்பில் பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது. பிறகு தங்க முலாம் பூசப்பட்ட கவசம் சாற்றப்பட்டது. பிறகு பல்வேறு வண்ண மலர் மாலைகள் சாற்றப்பட்டு மகா தீபாராதனை நடந்தேறியது. இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
பா. சீனிவாசன், வந்தவாசி.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?