கடனாக வாங்கிய ரூ.60 லட்சத்தைக் கேட்ட ஆசிரியைக்கு கொலை மிரட்டல்: பாஜக பிரமுகர் மீது வழக்குப் பதிவு

கடனாக வாங்கிய ரூ.60 லட்சத்தைக் கேட்ட ஆசிரியைக்கு கொலை மிரட்டல்: பாஜக பிரமுகர் மீது வழக்குப் பதிவு

தாம்பரம்:

தாம்​பரம் அடுத்த பெருங்​களத்​தூர், காம​ராஜர் சாலை​யில் வசித்து வருபவர்​கள் சுப்​பிரமணி​யம், ரம்யா தம்​ப​தி​யர். சுப்பிரமணி​யம் வெளி​நாட்​டில் பணிபுரிந்து வரும் நிலை​யில், அவரது மனைவி ரம்யா ஆலப்​பாக்​கம் பகு​தி​யில் உள்ள தனி​யார் பள்​ளி​யில் ஆசிரியை​யாக பணிபுரிந்து வரு​கிறார். இந்​நிலை​யில், கடந்த 2021-ம் ஆண்டு இவரது வீட்​டின் அரு​காமை​யில் உள்ள சிக்​கன் கடைக்கு சுப்​பிரமணி​யன் சிக்​கன் வாங்க சென்ற போது, பாஜக பிர​முகர் பழனிவேல் என்​பவர் அறி​முகம் ஆகி உள்​ளார்.


அப்​போது, தான் ரியல் எஸ்​டேட் தொழில் செய்து வரு​வ​தாக​வும், பாஜக​வில் பீ்ர்க்​கன்​கரணை இரும்​புலியூர் பகுதி பொறுப்​பாள​ராக பதிவு வகித்து வரு​வ​தாக தெரி​வித்​துள்​ளார். இந்​நிலை​யில், சுப்​பிரமணியம் மீண்​டும் 2021-ம் ஆண்டு டிசம்​பர் மாதம் வெளி​நாட்​டுக்​குச் சென்​றார். அப்​போது, சுப்​பிரமணியை தொலை பேசி​யில் தொடர்பு கொண்ட பாஜக பிர​முகர் பழனிவேல் தன் மனை​விக்கு உடல்​நிலை சரி​யில்லை என கூறி, ரூ.20 லட்​சம் பணத்தை வங்கி கணக்​கில் வாங்கி உள்​ளார்.


அது​மட்​டுமின்​றி, விஜயலட்​சுமி, கணேஷ் என பலரை அறி​முகம் செய்து மொத்​தம், ரூ. 60 லட்​சத்தை பழனிவேல் மோசடி செய்து உள்​ளார். பணத்தை இழந்த சுப்​பிரமணி​யின் மனைவி ரம்யா நேரடி​யாக​வும், தொலைபேசி மூல​மாக​வும் பழனி வேலிடம் பணத்​தைக் கேட்​டுள்​ளார்.


அப்​போது, பழனிவேல் ரூ.20 லட்​சம் மதிப்​புள்ள இடத்தை பத்​திரப் பதிவு செய்து தரு​வ​தாகக் கூறி, மணிமங்​கலம் அருகே ஒரு இடத்தை அவர்​களுக்கு கொடுத்​துள்​ளார். அரசுக்கு சொந்​த​மான இடம் அந்த இடத்தை பார்த்​த​போது அது அரசுக்கு சொந்​த​மான இடம் என தெரிய வந்​துள்​ளது.


இந்​நிலை​யில், ரம்யா தனது கணவரை வெளி​நாட்​டிலிருந்து வரவழைத்​து, பழனிவேலை அவரது அலு​வல​கத்​தில் நேரில் சந்​தித்​து, தர வேண்​டிய பணத்தை கேட்​டனர். அப்​போது, பணத்​தைத் தராமல் அலு​வல​கத்​தில் இருந்த கூட்​டாளி​களை வைத்து ரம்யா கண் முன்னே கணவரை அசிங்​க​மான வார்த்​தைகளால் திட்டி கொலை மிரட்​டல் விடுத்​த​தாகக் கூறப்​படு​கிறது.


இதுகுறித்​து, தாம்​பரம் ஆணை​யர் அலு​வல​கத்​தில் ரம்யா அளித்த அளித்​தார். அதன் பேரில், பழனிவேல் மீது பீர்க்​கன்​கரணை காவல் நிலை​யத்​தில் வழக்​குப் பதிவு செய்​து அவரை தேடி வரு​கின்​றனர்​.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%