கடலூர்: கடலூர் மாவட்டம் முழுவதும் புதனன்று காலை வரை கனமழை பெய்த நிலையில் சிதம்பரம் அருகே ஆண்டார்முள்ளிப்பள்ளம் கிராமத்தில் சுவர் இடிந்து, அசோதை, அவரது மகள் ஜெயா ஆகிய இரு வரும் பலியாகினர். இவர்கள் தங்களின் குடிசை வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, அருகிலிருந்த ஓட்டு வீட்டின் சிமெண்ட் சுவர் இடிந்து குடிசை மீது விழுந்துள்ளது. இதில், குடிசைக்குள் இருந்த அசோதையும் ஜெயா வும் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். அலறலைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் நீண்ட முயற்சிகளுக்குப் பிறகு இடிபாடுகளை அகற்றியும் அசோதையையும் ஜெயா வையும் உயிருடன் காப்பாற்ற முடியவில்லை. புதுச்சத்திரம் போலீசார், இருவரின் சடலங்களை யும் மீட்டு உடற்கூராய்வுக்காக கடலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். தாயும் மகளும் ஒரே நேரத் தில் உயிரிழந்த சம்பவத்தால் ஆண்டார்முள்ளிப்பள்ளம் கிராம மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?