திருச்சிராப்பள்ளி: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அணை முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து பருவமழை பெய்து வருவதாலும் மேட்டூர் அணை முழுக்கொள்ளளவில் இருப்பதாலும் அணைக்கு வரும் நீர்வரத்தைப் பொருத்து எந்த நேரத்தி லும் முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது என திருச்சி மாவட்ட ஆட்சி யர் வெங்கடேசன் சரவணன் எச்சரிக்கை விடுத்து உள்ளார். காவிரி மற்றும் கொள்ளிடக் கரையோர மக்கள் பாது காப்பான இடங்களுக்கு செல்லவும், சலவைத் தொழிலா ளர்கள் தங்களது உடைமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் இறங்கிக் குளிக்கவோ, துணி துவைக்கவோ, கால்நடைகளை ஓட்டிச் செல்லவோ வேண்டாம் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?