சென்னை, அக்.25–-
சென்னை துறைமுகம் ஸ்மார்ட் மற்றும் நிலையான கடல்சார் மையமாக மாற இருக்கிறது என்று இந்திய துறைமுக சங்கத்தின் தலைவர் சுனில் பாலிவால் தெரிவித்தார்.
மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் மற்றும் இந்திய துறைமுக சங்கம் ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட 'இந்திய கடல்சார் வாரம்-–2025' வருகிற 27-ந்தேதியிலிருந்து 31-ந்தேதி வரை மும்பையில் உள்ள பம்பாய் கண்காட்சி மையத்தில் நடக்கிறது.
இது நாட்டின் முதன்மையான உலகளாவிய கடல்சார் நிகழ்வாகும். 100-க்கும் மேற்பட்ட நாடுகள், 1 லட்சம் பிரதிநிதிகள் மற்றும் 500 கண்காட்சியாளர்களை இந்த நிகழ்ச்சி ஒன்றிணைக்கிறது. இதில் துறைமுக நவீனமயமாக்கல், பசுமை கப்பல் போக்குவரத்து, டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், தளவாடங்கள் மற்றும் கப்பல் கட்டுமானம் ஆகியவற்றில் ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் மதிப்புள்ள முதலீடுகள் ஈர்க்கப்பட உள்ளன.
இதனையொட்டி சென்னை துறைமுக ஆணையம் சார்பில் சென்னையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்ச்சி நடந்தது. சென்னை துறைமுக ஆணையம் மற்றும் காமராஜர் துறைமுகம் மற்றும் இந்திய துறைமுக சங்கத்தின் தலைவர் சுனில் பாலிவால் தலைமை தாங்கி பேசும்போது, “இந்த கூட்டாண்மைகள் சென்னை துறைமுகத்தை எதிர்காலத்துக்கு தயாராக, ஸ்மார்ட் மற்றும் நிலையான கடல்சார் மையமாக மாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கும்”என்றார்.
சென்னை துறைமுக ஆணையம் மற்றும் பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப வழங்குனர்கள் உள்ளிட்ட பல்வேறு கூட்டாண்மை அமைப்புகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. நிகழ்ச்சியில், சென்னை துறைமுக ஆணையத்தின் துணைத் தலைவர் மற்றும் கடல்சார் இந்திய அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?