தமிழகத்தில் நெல் ஈரப்பதத்தை ஆய்வு செய்ய 3 நிபுணர் குழு

தமிழகத்தில் நெல் ஈரப்பதத்தை ஆய்வு செய்ய 3 நிபுணர் குழு


சென்னை, அக்.25–


தமிழ்நாட்டில் கொள்முதல் செய்யப்படவுள்ள நெல்லின் ஈரப்பதத்தினை ஆய்வு செய்திட மூன்று நிபுணர் அடங்கிய குழுக்களை மத்திய அரசு நியமித்து ஆணையிட்டுள்ளது.


தமிழ்நாட்டில் நடப்பு 2025–-2026–ம் ஆண்டிற்கான குறுவை பருவ நெல் கொள்முதல் செப்டம்பர் 1–ம் தேதி முதல் தொடங்கி 1,839 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவினை 17% லிருந்து 22% வரை அதிகரிக்க தமிழ்நாடு அரசால் கடந்த 19–ந் தேதி அன்று ஒன்றிய அரசிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது.


அதனை தொடந்து, ஒன்றிய அரசு தமிழ்நாட்டில் கொள்முதல் செய்யப்படவுள்ள நெல்லின் ஈரப்பதத்தினை ஆய்வு செய்திட மூன்று நிபுணர் அடங்கிய குழுக்களை நியமித்து ஆணையிடப்பட்டுள்ளது. அந்நிபுணர் குழு இன்று (25–ந் தேதி) முதல் தமிழ்நாட்டில் கொள்முதல் செய்யப்படவுள்ள நெல்லின் ஈரப்பதம் குறித்து மாவட்டந்தோறும் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளனர்.


அதன்படி முதல் குழு இன்று செங்கல்பட்டு மாவட்டத்திலும், 26–ந் தேதி அன்று திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களிலும், இரண்டாவது குழு இன்று தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களிலும், 26–ந் தேதி அன்று திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களிலும், 27–ந் தேதி அன்று கடலூர் மாவட்டத்திலும் மற்றும் மூன்றாவது குழு இன்று திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களிலும், 26–ந் தேதி அன்று மதுரை மற்றும் தேனி மாவட்டங்களிலும் ஆய்வு செய்ய உள்ளனர் என தெரித்துக் கொள்ளப்படுகிறது என்று அரசு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%