கடும் போக்குவரத்து நெரிசலால் திணறும் டெல்லி! கனமழையால் வாகன ஓட்டிகள் தவிப்பு
Sep 03 2025
11

டெல்லி:
டெல்லியில் கனமழை பெய்து வருவதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. சுமார் 7-8 கி.மீ நீளம் வரை போக்குவரத்து நெரிசல் தொடர்வதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியுற்று வருகின்றனர்.
குருகிராமில் கடும் மழை காரணமாக வாகனங்கள் பல மணி நேரம் ஒரே இடத்தில் நின்று போக்குவரத்து ஸ்தம்பித்தது. டெல்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலை உள்ளிட்ட பல இடங்களில், வாகனங்கள் 7-8 கிலோமீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. சில இடங்களில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் நீடித்தது.
டெல்லி குருகிராமில் மதியம் 3 மணி முதல் மாலை 7 மணி வரை 100 மி.மீட்டருக்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளது என மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்திருக்கிறது. கனமழை காரணமாக நாளைய தினம் மட்டும் அலுவலகங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய கூறியிருக்கின்றன. பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை நடத்தவும் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கின்றன.
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) பஞ்சாப், ஹரியானா மற்றும் சண்டிகருக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் யமுனை நதியின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
இதனால் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையின் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. டெல்லியிலும் கனமழை காரணமாக பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. முக்கிய சாலைகள் மற்றும் சந்திப்புகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றதால், பயணிகள் பல மணி நேரம் சிக்கித் தவித்தனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?