கட்டாய ராணுவ சேவைக்கு கடும் எதிர்ப்பு ஜெர்மனி முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டம்

கட்டாய ராணுவ சேவைக்கு கடும் எதிர்ப்பு ஜெர்மனி முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டம்

ஜெர்மனி அரசு கடந்த மாதம் கட்டாய ராணுவ சேவை திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் 90 நகரங்களில் சுமார் 55,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உக்ரைன்-ரஷ்யா போர் தீவிரமடை யும் சூழலில் ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய இரு நேட்டோ நாடுகளும் கட்டாய ராணுவ சேவையை மீண்டும் அறிமுகம் செய்துள்ளன. குறிப்பாக நேட்டோ அமைப்பின் தேவைகளைப் பூர்த்தி செய்ய தனது நாட்டு ராணுவத்தின் எண்ணிக்கையை 4,60,000 ஆக உயர்த்த உள்ளதாக ஜெர்மன் பாதுகாப்புத் துறை அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் தெரிவித்துள் ளார். தற்போது ஜெர்மன் கொண்டு வந்துள்ள சட்டப்படி 18 வயதடைந்த அனைவருக்கும் விண்ணப்பங்கள் கொடுக்கப்படும். அதனை அவர்கள் கட்டாயம் நிரப்ப வேண்டும். ராணுவத்தில் தன்னார்வமாகச் சேருபவர்களின் எண்ணிக்கை போதவில்லையெனில் விண்ணப்பங்களின் தகவல்கள் அடிப்ப டையில் முதலில் குலுக்கல் முறையி லும், பின்னர் பிற வழிகளில் கட்டாயப் படுத்தியும் அவர்களை ராணுவத்தில் சேர்க்க முடியும். இந்நிலையில் மாணவர்களின் எதிர்கால பாதுகாப்பையும் அமைதி யான வாழ்க்கையை உருவாக்க வேண்டி யும் மாணவர் அமைப்புகள் உள்ளிட்ட பல அமைப்புகள் இணைந்து இந்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து டிசம்பர் 5 வெள்ளியன்று இப்போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் போது இந்த ராணுவ சேவையின் நோக்கம் நாட்டின் பாது காப்பைச் சார்ந்தது அல்ல. அரசின் போர் வெறியையும், புதிதாக ஓரு போருக்குச் செல்லும் போக்கையும் காட்டுகிறது. நாங்கள் போரில் சாக அவர்கள் விரும்ப வில்லை என மாணவர்கள் அரசுக்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். 2026 மார்ச் 5, அன்று மீண்டும் ஒரு போராட்டம் நடத்தப்படும் என அவர்கள் அறிவித்துள்ளனர். தன்னார்வம் என்ற பெயரில் அறி முகம் செய்யப்பட்டுள்ள கட்டாய ராணுவ சேவையில் இணைய பெரும்பாலான இளைஞர்கள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் சேவையில் சேர்ந்த முதல் நாளில் இருந்தே மாதம் சுமார் 2 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் (2,400 யூரோ) சம்பளம். பொதுப் போக்குவரத் தில் இலவசப் பயணம். அவர்களின் குழந்தைகளுக்கு சில சலுகைகள் என ஜெர்மன் அரசு அறிவித்துள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%