கனடாவுக்கு கூடுதலாக 10 சதவீதம் வரி விதித்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் - காரணம் என்ன?
Oct 27 2025
12
வாஷிங்டன்,
அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த ஜனவரி மாதம் டொனால்டு டிரம்ப் பதவியேற்றார். ஜனாதிபதியாக பதவியேற்றதுமுதல் அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, இந்தியா, சீனா, பிரேசில் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக வரி விதித்துள்ளார். அந்த வகையில் கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய், அலுமினியம், இரும்பு உள்பட பல்வேறு பொருட்களுக்கும் 10 முதல் 50 சதவீதம் வரை கூடுதல் வரி விதித்துள்ளார். இந்த வரி விதிப்பால் அமெரிக்கா - கனடா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதேவேளை, வரி விதிப்பை குறைக்க இருநாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வந்தது.
இதனிடையே, வரி விதிப்பு தொடர்பாக அமெரிக்காவுக்கு எதிரான விளம்பரம் கனடாவின் ஒண்டாரியோ மாகாண அரசால் வெளியிடப்பட்டது. அதில் மறைந்த அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ரோனல்டு ரிகன், வரி விதிப்பால் அமெரிக்கா பாதிக்கப்படும்’என கூறும் வீடியோ இடம்பெற்றிருந்தது. இந்த விளம்பர வீடியோவால் அமெரிக்கா - கனடா உறவில் விரிசல் மேலும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது கூடுதலாக 10 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த கூடுதல் வரி உடனடியாக அமலுக்கு வரும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?