கனடா ஓபன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டிக்கு முன்னேறியது கோகோ காப் ஜோடி
Aug 07 2025
23

கனடா ஓபன் டென்னிஸ் தொடர் டொரண்டோ நகரில் நடந்து வருகிறது.
அமெரிக்காவின் கோகோ காப் ஜோடி அரையிறுதியில் வெற்றி பெற்றது.
டொரன்டோ:
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடந்த அரையிறுதி சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப்-மெக் கார்ட்னி கெஸ்லர் ஜோடி, செர்பியாவின் டேனிலொவிச்- தைவானின் ஹை சூ வெய் ஜோடி உடன் மோதியது.
இதில் கோகோ காப் ஜோடி முதல் செட்டை 5-7 என இழந்தது. இதில் சுதாரித்துக் கொண்ட கோகோ காப் ஜோடி அடுத்த இரு செட்களை 6-4, 10-6 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் 1 வீராங்கனையான கோகோ காப் தோல்வி அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?