கனவு ஏன் வருகிறது
😴 கனவுகள் என்பது உறக்கத்தில் நாம் அன்றாடம் செய்யக்கூடிய செயல்களால் எதிர்காலத்தில் ஏற்படும் நன்மை மற்றும் தீமைகளை முன்கூட்டியே அறிவிக்கின்ற ஒரு ஏழாம் அறிவால் செய்யப்பட்ட ஒரு சாவி ஆகும்.
😴 கனவுகள் குறித்து புராணங்களிலும் காப்பியங்களிலும் மிகவும் சிறப்பாக எடுத்துரைத்துள்ளனர். மனோதத்துவ ரீதியாக ஆழ்மனமானது கனவின் மூலம் எதிர்காலத்தில் நடக்க போகும் நிகழ்வை முன்கூட்டியே தெரிவிக்கும் ஒரு அற்புத நுழைவாயில் ஆகும்.
😴 நல்ல மகிழ்ச்சியான கனவுகள் நல்ல பலன்களையும், தீய கனவுகள் தீய பலன்களையும் கொடுக்கும். சில நேரங்களில் கனவில் நடக்கும் தீய செயல்களால் நல்ல வினைகளும், நல்ல கனவில் நடக்கும் செயல்களால் தீய வினைகளும் ஏற்படும்.
😴 கனவுகள் காணும் நேரங்களின் அடிப்படையில் அதனால் ஏற்படும் விளைவுகள் மூன்று காலங்களுக்கு தகுந்தாற் போல் பகுக்கப்பட்டுள்ளது.
😴 உறங்கியவுடன் ஏற்படும் கனவுகள் இறந்த காலத்தில் நடந்து முடிந்த நிகழ்ச்சிகளுடன் தொடர்புடையதாக இருக்கும்.
😴 நள்ளிரவில் தோன்றக் கூடிய கனவுகள் நடைமுறை வாழ்க்கையில் நிகழும் நிகழ்ச்சிகளின் அடிப்படையில் உருவாகும்.
😴 விடியற்காலையில் ஏற்படும் கனவுகள் வருங்காலத்தை பற்றி சொல்லும் கனவுகளாக அமையும்.
😴 கனவுகளில் சில ஆச்சரியமானதாகவும், அதிர்ச்சியானதாகவும், பயமூட்டக் கூடியதாகவும், நம்ப முடியாததாகவும் இருக்கும்.
😴 இரவில் படுக்கும் போது வரும் கனவுகளில் சிலவற்றை, காலையில் எழுந்திருக்கும் போது நம்மால் ஞாபகப்படுத்திப் பார்ப்பது என்பது கடினமானதாக இருக்கும்.
😴 அதுவே பயத்தை ஏற்படுத்தும் கனவுகள் என்றால் எப்போதும் ஞாபகத்தில் இருக்கும். ஆனால், சரியாக தெளிவாக இருக்காது. ஏனெனில் நமது மனம் தூக்கத்தில் இருந்து எழுந்திருக்கும் போது, அந்த கனவுகளை சிறிது நேரம் வேண்டுமென்றால் ஞாபகத்தில் வைத்திருக்கும். ஆனால், நீண்ட நேரம் மனதில் இருக்காது.
😴 மேலும் கனவுகள் தூக்கத்தின் போது மட்டும் வருவதில்லை, விழித்திருக்கும் போதும் கூட வரும். ஆனால், அத்தகைய கனவுகள் மனதில் நீங்காது இடம் பெற்றிருந்தால் மட்டுமே வரும்.
😴 இரவில் உறங்கும் போது, ஒருவருக்கு குறைந்தது 2 - 4 கனவுகள் வரும் வாய்ப்புள்ளது. ஆனால், அவை அனைத்தையும் ஞாபகப்படுத்த முடியாது. அவை அனைத்தும் மறந்துவிடும்.
😴 ஒரு சில கனவுகளை மட்டுமே நினைவில் வைத்திருக்க முடியும். ஏனெனில் நமக்கு வரும் கனவுகள் உங்கள் மனதை அல்லது உணர்ச்சியை பாதிக்கும் வகையில் இருந்தால், அந்த கனவுகள் மறக்காமல் இருக்கும். எனவே கனவுகள் அனைத்தும் ஒவ்வொருவரின் உணர்ச்சி, ஆசை, உள்ளத்தின் பாதிப்பு, பயம் போன்ற பல காரணங்களால் வரும்.
நாம் கண்ட கனவுகளும் அதன் பலன்களும் :
👉 அழகிய பதுமையை(பெண்) கனவில் காண்பது வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்படுவதை குறிக்கிறது.
👉 மங்கள பொருளுடன் கன்னிப் பெண் வீட்டிற்குள் நுழைவது வீட்டில் உள்ள பெண் பருவமடைய போகிறார்கள் அல்லது திருமண முயற்சி கைக்கூடும்.
👉 அறிமுகமில்லாதவர்கள் மற்றும் புதிய நபர்களை கனவில் கண்டால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.
👉 அணைக்கட்டில் நீர் வழிந்தோடுவது போல் கனவு வருவது வரவுக்கு மீறிய செலவு ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.
👉 அணை உடைவது போல் கனவு கண்டால் நெருங்கிய நண்பர்களிடமிருந்து பிரிந்து செல்லுதல் மற்றும் குடும்பத்தில் சில பிரச்சனைகள் ஏற்படும் என்பதை குறிக்கிறது.
👉 ஆதரவற்ற சிறுவனுக்கு உதவுவது போல் கனவு கண்டால் செல்வந்தரின் தொடர்பு ஏற்படும்.
👉 அக்னியைக் கனவில் கண்டால் செல்வம் உண்டாகும்.
👉 அட்டைப்பூச்சியை கனவில் கண்டால் சத்ருக்களால் பிரச்சனைகள் உருவாகும் என்பதைக் குறிக்கிறது.
👉 அம்மை நோயால் கொப்பளம் உண்டாகுவது போல் கனவு கண்டால் தனலாபம் ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.
👉 அரிசி நிறைந்த கூடையை கனவில் காணுதல் நன்மை உண்டாகும்.
👉 அணிகலன்கள் வாங்குவது போல் கனவு வந்தால் இன்பம் பயக்கும்.
👉 அத்தி மரத்தை காண்பது குடும்பத்தில் விவாக நிகழ்வு ஏற்படுவதை குறிக்கும்.
👉 ஆலயத்தை கனவில் கண்டால் இறைவனின் அருளால் நமக்கு கூடிய விரைவில் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும்.
👉 ஆலயத்தில் நாம் தனியாக இருந்து கதவு மூடப்பட்டது போல் கனவு காண்பது தொழிலில் தேக்க நிலைகள் ஏற்படும்.
👉 ஆலயத்தின் தலை வாசலை நாம் திறந்து உள்ளே போவது போல் கனவு வருவது புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள் என்பதை குறிக்கும்.
👉 ஆடுகளைக் கனவில் கண்டால் தனவிருத்தி உண்டாகும் என்பதைக் குறிக்கும்.
👉 ஆமையை கனவில் கண்டால் தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள் என்பதைக் குறிக்கிறது.
👉 ஆயுதம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை கனவில் கண்டால் துன்பம் நீங்கும்.
👉 இனிமையான பாடலை கேட்பது போல் கனவு கண்டால் குடும்பத்தில் துன்பம் நீங்கி இன்பம் உண்டாகும் என்பதைக் குறிக்கும்.
👉 இரும்பை கனவில் காண்பது நஷ்டத்தை குறிக்கிறது.
👉 இருளைக் காண்பது போல் கனவு கண்டால் ஆரோக்கியத்தில் கவனத்தை செலுத்த வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
👉 இறந்தவர்களை கனவில் கண்டால் சுபச்செய்தி வரும் என்பதைக் குறிக்கிறது.
👉 இடாகினி(காளி) தெய்வத்தை கனவில் கண்டால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வருவதைக் குறிக்கிறது.
👉 இந்திர தனுசு(வானவில்) கனவில் கண்டால் குடும்பத்தில் இருப்பவர்களின் வாழ்க்கையில் மாற்றம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
👉 ஈக்கள் தன்னைச் சுற்றி வருவது போல் கனவு கண்டால் வெளிவட்டாரங்களில் பகைமை அதிகரிக்கும்.
👉 ஈச்ச மரத்தைக் கனவில் கண்டால் தன்னுடைய சொந்த பந்தங்களில் பகைமையை உருவாக்கும்.
👉 கனவில் உடை எரிவதுபோல் கண்டால் வீட்டில் உள்ள பெண் குழந்தைகள் பூப் பெய்துவார்கள். பொருள் இழப்பு ஏற்படலாம்.
👉 உடுக்கையை காண்பது போல் கனவு கண்டால் தனக்கு ஏற்படும் ஆபத்திற்கு நெருங்கிய நண்பர்கள் உதவுவார்கள் என்பதைக் குறிக்கிறது.
👉 உணவு உண்பது போல் கனவு கண்டால் தனலாபம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
👉 உணவு சமைப்பது போல் கனவு கண்டால் முதலாளியாக இருப்பவர்கள் தொழிலாளியாக மாறுவார்கள் என்பதைக் குறிக்கிறது.
👉 உத்தியானம் (தோட்டம்) வருவது போல் கனவு கண்டால் குடும்பம் விருத்தியாகும் என்பதைக் குறிக்கிறது.
👉 உப்பைக் கனவில் கண்டால் தனலாபம் உண்டாகும்.
👉 உரம் இடுவதாக கனவில் கண்டால் வீட்டிற்கு விருந்தினர்கள் வருவார்கள் என்பதைக் குறிக்கிறது.
👉 உப்பளத்தை கனவில் கண்டால் விருந்துக்குப் போகப் போகிறோம் என்பதைக் குறிக்கிறது.
👉 ஊமையைக் காண்பது போல் கனவு வந்தால் தொழிலில் தேக்க நிலை ஏற்படும்.
👉 ஊன்(இறைச்சி) விற்பதைக் கனவில் கண்டால் எதிர்பாராத தன வரவு உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
👉 எண்ணெய் தேய்த்துக் கொள்வது போல் கனவு கண்டால் உடல் வலிமை குறையும் என்பதைக் குறிக்கிறது.
👉 எருது மிதிப்பது போல் கனவு கண்டால் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் குறையும்.
👉 எருது சீறுவது போல் கனவு கண்டால் அதிகாரம் குறையும்.
👉 எறும்பு ஊறுவதை கனவில் கண்டால் பதவி உயர்வு உண்டாகும்.
👉 எள்ளை கனவில் கண்டால் அசுப காரியம் ஏற்படுவதை உணர்த்துகிறது.
👉 ஏணியின் மேலே ஏறுவது போல் கனவு கண்டால் உத்யோகத்தில் உயர்வு ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.
👉 ஏணியில் கீழே இறங்குவது போல் கனவு கண்டால் தொழிலில் தாழ்வு நிலை ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.
👉 ஒட்டகத்தைக் கனவில் கண்டால் பயணங்களில் பல்வேறு இன்னல்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
👉 ஓடம் தண்ணீரில் மிதப்பது போல் கனவு கண்டால் துக்கம் வருவதை குறிக்கிறது.
👉 ஓநாய் விரட்டிக் கொண்டு வருவது போல் கனவு கண்டால் மனதிற்கு பிடித்த உறவினர்களால் பகைமை ஏற்படுவதை குறிக்கிறது.
👉 கங்கை நதியை கனவில் கண்டால் துன்பம் அனைத்தும் விலகும் என்பதைக் குறிக்கிறது.
👉 கடற்கரையில் இருப்பது போல் கனவு கண்டால் வாழ்வில் உயர்வு உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
👉 கத்திரிக்காய் சாப்பிடுவது போல் கனவு வந்தால் குடும்பத்தில் சௌபாக்கியம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
👉 கல்யாணம் நடப்பது போல் கனவு கண்டால் வியாதியால் துன்பம் ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.
👉 கனிகளை கனவில் காண்பது மகிழ்ச்சியான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
👉 காகம் தலையில் அடிப்பதாக கனவு கண்டால் கெடுதல் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
👉 காசி நகரத்தைக் கனவில் கண்டால் எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியில் முடியும் என்பதைக் குறிக்கிறது.
👉 காவல்காரர்களை காண்பது போல் கனவு வந்தால் சாதகமற்ற நிலையை உண்டாக்கும்.
👉 கிழங்குகளை கனவில் கண்டால் தொழிலில் நல்ல லாபம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
👉 கிழவியை காணுவது போல் கனவு வந்தால் தனப் பெருக்கம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
👉 கீரியை கனவில் கண்டால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.
👉 குங்குமத்தை கனவில் கண்டால் மங்களகரமான நிகழ்ச்சி நடக்கும் என்பதைக் குறிக்கிறது.
👉 குரங்கை கனவில் கண்டால் விரோதிகளின் வருகையால் துன்பங்கள் ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.
👉 குயிலைக் கனவில் கண்டால் நல்ல வாழ்க்கைத்துணை அமையும் என்பதைக் குறிக்கிறது.
👉 குழந்தைகளை கனவில் கண்டால் சந்தோஷமும், மகிழ்ச்சியும் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
👉 கொக்கை கனவில் கண்டால் வயலில் விளைச்சல் அதிகரிக்கும் என்பதைக் குறிக்கும்.
👉 கோட்டையை கனவில் கண்டால் நாம் எடுக்கும் முயற்சிகளில் எளிதில் வெற்றி கிடைக்கும். மேலும் புகழ் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
👉 கோவில் கோபுரத்தை கனவில் கண்டால் பாவங்கள் நீங்கி விட்டது என்பதை சுட்டிக் காட்டுகிறது.
👉 சங்கை கனவில் கண்டால் துன்பங்கள் விலகி, செல்வமும், சுகவாழ்வும் உண்டாகும் என்பதைக் குறிக்கும்.
👉 சாக்கடையை கனவில் கண்டால் நல்ல செயல்களால் இன்பம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
👉 சாவியை கனவில் கண்டால், திருமணப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும்.
👉 சித்திரத்தை கண்டால் மனநிறைவு உண்டாகும்.
👉 சிலையை கனவில் பார்த்தால் புகழ் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
👉 சுறாமீன் கனவில் வந்தால் நண்பர்களின் வீட்டிற்கு விருந்துக்கு செல்வோம் என்பதைக் குறிக்கிறது.
👉 சேலையை கனவில் கண்டால் புத்திரர் வருகையை சுட்டிக் காட்டுகிறது.
👉 தந்தையைக் கனவில் கண்டால் கஷ்டங்கள் அனைத்தும் நிவர்த்தியாகும் என்பதைக் குறிக்கிறது.
👉 தானியத்தை கனவில் கண்டால் செல்வம் பெருகும் என்பதைக் குறிக்கிறது.
👉 திண்பண்டக் கடையை கனவில் கண்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
👉 தீபத்தை கனவில் கண்டால் உடல்நலம் மேம்படும் என்பதைக் குறிக்கிறது.
👉 துடைப்பத்தைக் கனவில் கண்டால் மனக்கஷ்டம் நீங்கும் என்பதைக் குறிக்கிறது.
👉 தெப்பத்தை கனவில் கண்டால் எடுக்கும் முயற்சிகள் கைக்கூடும்.
👉 தேகத்தில் கொப்புளங்கள் இருப்பதாக கனவு கண்டால் தனலாபம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
👉 தேங்காய் மரத்தில் இருந்து விழுவது போல் கனவு கண்டால் குழந்தைகளால் பிரச்னைகள் ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.
👉 தேவர்களை கனவில் காண்பது மேன்மையை உண்டாக்கும்.
👉 தேள் கொட்டுவதாக கனவு கண்டால் காரிய சித்தி ஏற்படும்.
👉 தேனைப் பருகுவதாக கனவு கண்டால் தன இலாபம் உண்டாகும்.
👉 தேனீக்கள் பூக்கொண்டு வருவது போலவும், கூடு கட்டுவது போலவும் கனவு கண்டால் நல்லது நடக்கும்.
👉 தையலத்தை கனவில் காண்பது சுப சகுனம் அல்ல.
👉 தொட்டியில் குழந்தை இருப்பது போன்று கனவு காண்பது குடும்பத்தில் இன்பம் பெருகுவதைக் குறிக்கிறது.
👉 தோல் விற்கும் வியாபாரியை கனவில் காண்பது பெரியோர்களின் நட்பு கிடைப்பதைக் குறிக்கிறது.
👉 தோட்டத்தில் பூக்கள், பழங்கள் இருப்பது போன்று கனவு காண்பது குடும்ப அபிவிருத்தி ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.
👉 தோப்பினுள் இலை, காய் மற்றும் கனிகளை பறிப்பதாக கனவு காண்பது வியாதிகள் வருவதை முன்கூட்டியே தெரிவிக்கிறது.
👉 தோரணம் கட்டிய வீட்டின் வாயிற்படிகளை கனவில் காண்பது மிகுந்த இன்பம் ஏற்படுவதைக் குறிக்கும்.
👉 தோட்டத்தில் இளங்காளைகள் இருப்பதாக கனவு வந்தால் குழந்தைகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும்
👉 நகச்சுற்றை கனவில் கண்டால் கணவன்-மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.
👉 நகைப்பது போல் கனவு கண்டால் குடும்பத்தில் வீண் செலவுகள் ஏற்பட்டு வறுமை உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
👉 நகரா (இசைக்கருவி) சத்தத்தை கேட்பது போல் கனவு கண்டால், ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டு அதில் வெற்றி கிடைக்கும் என்பதைக் குறிக்கிறது.
👉 நடனம் ஆடும் மங்கையை கனவில் கண்டால் திருமணம் விரைவில் நடைபெறும் என்பதைக் குறிக்கிறது.
👉 நண்டை கனவில் கண்டால் கடன்களால் துன்பம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
👉 நட்சத்திரத்தை பிரகாசமாக கனவில் கண்டால் புத்திரபேறு உண்டாவதைக் குறிக்கிறது.
👉 நரியை கனவில் கண்டால் குடும்பத்தில் பிரச்சனை உருவாகும் என்பதைக் குறிக்கிறது.
👉 நவதானியங்களை கனவில் கண்டால் ஆயுள் விருத்தி உண்டாகும்.
👉 நாகதாளி(சப்பாத்திக்கள்ளி) அழிவதாகக் கனவில் கண்டால் பகைவர்களின் இன்னல்கள் நீங்கும் என்பதைக் குறிக்கும்.
👉 நாகம் விரைந்து செல்வதாக கனவில் கண்டால் நன்மை உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
👉 நாடியில்(நரம்பு) ரத்தம் வருவது போல் கனவு கண்டால் நஷ்டம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
👉 நாட்டியக் கச்சேரியில் பங்கேற்பது போல் கனவு கண்டால் சேமிப்பு மேலும் உயரும் என்பதைக் குறிக்கிறது.
👉 நாடோடியைக் கனவில் கண்டால் எதிர்பாராத சங்கடங்கள் உருவாகும் என்பதைக் குறிக்கிறது.
👉 நிச்சய தாம்பூலத்தை கனவில் கண்டால் திருமணத்திற்கு வரன் அமையும் என்பதைக் குறிக்கும்.
👉 நிலமகள்(பூமிதேவி) படத்தை கண்டால் வெளிநாட்டு பயணங்களில் இருந்த தடைகள் விலகும் என்பதைக் குறிக்கிறது.
👉 நிறைகுடத்தை கனவில் கண்டால் செய்யும் காரியங்களில் புகழ் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
👉 நீளமாக தொங்கும் கரிய குழல்(கூந்தல்) கொண்ட பெண்ணை கனவில் கண்டால் சுபம் உண்டாகும்.
👉 நெய்யைக் கனவில் கண்டால் ஆரோக்கியத்தில் உள்ள குறைபாடுகள் நீங்கி ஆயுள் விருத்தி உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
👉 நோய் ஏற்பட்டு உடல் வருந்துவதாகக் கனவு கண்டால் பொருள் சேர்க்கை உண்டாகும்.
👉 பட்டத்தை கனவில் கண்டால் அரசு உதவிகள் கிடைப்பதை சுட்டிக் காட்டுகிறது.
👉 பதர்களை (வெற்றுத் தானியம்) கனவில் கண்டால் தன விரயம் ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.
👉 பஞ்சை கனவில் கண்டால் தனலாபம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
👉 பவளத்தை கனவில் கண்டால் நோயில்லாமல் வாழ்வதை சுட்டிக் காட்டுகிறது.
👉 பனி பெய்வதாக கனவு கண்டால் துன்பம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
👉 பாடும் பறவையை கனவில் கண்டால் மன மகிழ்ச்சி உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
👉 பாம்பாட்டியைக் கனவில் கண்டால் நன்மை உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
👉 பாழான வீட்டைக் கனவில் கண்டால் குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு துன்பம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
👉 பிணத்தைக் கனவில் கண்டால் பொருட்சேர்க்கை மிகுதியாகும் என்பதைக் குறிக்கிறது.
👉 பிரசவ வலியில் உள்ள பெண்ணைக் கனவில் கண்டால் பணியில் மேன்மையான பலன்கள் உண்டாகும்.
👉 பித்தம் பிடித்தவனை கனவில் கண்டால் செல்வ செழிப்பு உண்டாகும்.
👉 புத்தகத்தை (வண்ணப் படங்களுடன்) கனவில் கண்டால் மகிழ்ச்சியான செய்திகள் வரும் என்பதைக் குறிக்கும்.
👉 புளியை கனவில் கண்டால் உற்றார் உறவினர்களை சந்திப்போம் என்பதைக் குறிக்கிறது.
👉 புற்றை (பாம்பு புற்று) கனவில் கண்டால் இன்பம் உண்டாகும்.
👉 பூக்கள் நிறைந்த கலத்தை கனவில் கண்டால் வருமானம் பெருகும், பொருளாதார வளம் ஏற்படும்.
👉 பூச்செண்டு கனவில் வருவது பொருளாதார மேன்மை குறைவதை சுட்டிக் காட்டுகிறது.
👉 பெண், தன்னை நோக்கி வருவது போல் கனவு வந்தால் தனலாபம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
👉 பெருச்சாளியை கனவில் கண்டால் இன்னல்கள் ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.
👉 பேன் தலையில் இருப்பது போல் கனவு கண்டால் ஏமாற்றம் உண்டாகும்.
👉 பை நிறைய தானியங்கள் இருப்பது போல் கனவு கண்டால் சுபம் உண்டாகும்.
👉 பைத்தியத்தை கனவில் கண்டால் காரிய சித்தி உண்டாகும்.
👉 பொன்(தங்கம்) கனவில் வந்தால் மங்களம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
👉 மயானத்தை கனவில் கண்டால் காரியத் தடங்கல் ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.
👉 மரணத்தை கனவில் கண்டால் குழந்தைப் பேறு கிட்டும்.
👉 மரத்தை பதமையான(மென்மையான) நிலையில் இருப்பது போல் கனவு கண்டால் சுபநிகழ்ச்சிகள் நடக்கும் என்பதைக் குறிக்கிறது.
👉 மலர்களை கனவில் கண்டால் சொத்து அபிவிருத்தி உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
👉 மழையை கனவில் கண்டால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
👉 மாமிசம் கொண்டு செல்வது போல் கனவு வந்தால் கீர்த்தி உண்டாகும் என்பதைக் குறிக்கும்.
👉 மாதுளை பழத்தை உண்பது போல் கனவு கண்டால் கெட்ட நிகழ்வு ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.
👉 மிருதங்க ஒலியை கேட்பது போல் கனவு கண்டால் விரைவில் திருமணம் கைகூடும்.
👉 மின்னலை கனவில் கண்டால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
👉 மீன்களை கனவில் காணுதல் நன்மை பயக்கும்.
👉 மூடவரைக் கனவில் கண்டால் தன விரயம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
👉 முதலையை கனவில் கண்டால் அறிவாற்றல் பெருகும் என்பதைக் குறிக்கிறது.
👉 முத்தை கனவில் கண்டால் புகழ் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
👉 முயலை கனவில் கண்டால் பொருள் வரவு ஏற்பட்டு இன்பம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
👉 மேட்டில் இருப்பது போல் கனவு கண்டால் பொறுப்புகள் அதிகரிக்கும்.
👉 மொட்டை அடிப்பது போல் கனவு கண்டால் தொழிலில் நஷ்டம் ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.
👉 மோதிரம் கனவில் வந்தால் சுப பலன்கள் உண்டாகும்.
👉 யாகத்தை கனவில் கண்டால் பிரச்சனைகளால் துன்பம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
👉 யானையை கனவில் கண்டால் மகிழ்ச்சி உண்டாகும்.
👉 ரத்தத்தை கனவில் கண்டால் பொருள் சேர்க்கை உண்டாகும்.
👉 வண்டியை கனவில் கண்டால் இன்பம் மற்றும் துன்பம் சரிபாதி அளவில் இருக்கும் என்பதைக் குறிக்கிறது.
👉 வண்டுகள் தேனை சேகரிப்பது போல் கனவில் கண்டால் எடுக்கும் முயற்சி வெற்றி பெறும்.
👉 வலிமைமிக்கவர்களை கனவில் கண்டால் பொருட்சேர்க்கை உண்டாகும்.
👉 வாத்தை கனவில் கண்டால் கடன் உதவிகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கிறது.
👉 விதவையை கனவில் கண்டால் உயர் பதவிகள் கிடைக்கும்.
👉 விவசாயியை கனவில் கண்டால் செய்யும் காரியம் வெற்றியில் முடியும் என்பதைக் குறிக்கிறது.
👉 வில்வ இலையை கனவில் கண்டால் புத்திக்கூர்மை பெருகும்.
👉 விளக்கு எரிவதைப் போல் கனவு கண்டால் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.
👉 விளை நிலத்தை பசுமையுடன் கனவில் கண்டால் மகிழ்ச்சி உண்டாகும் என்பதைக் குறிக்கும்.
👉 வீணை ஓசையை கேட்பது போல் கனவு வந்தால் சுப செய்தி வரும் என்பதைக் குறிக்கிறது.
👉 வைத்தியம் செய்பவரை கனவில் கண்டால் தனலாபம் கிட்டும்.
Thanks and regards
A s Govinda rajan
Kodambakkam Chennai
600024