கன்னியாகுமரி கண்ணாடி பாலம் உறுதியாக உள்ளது - மாவட்ட கலெக்டர் விளக்கம்

கன்னியாகுமரி கண்ணாடி பாலம் உறுதியாக உள்ளது - மாவட்ட கலெக்டர் விளக்கம்

கண்ணாடி பாலத்தில் சுத்தியல் விழுந்து சிறிய கீறல் மட்டுமே ஏற்பட்டதாக கலெக்டர் அழகு மீனா தெரிவித்துள்ளார்.

குமரி,


உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அங்குள்ள விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளுவர் சிலையினை இணைக்கும் வகையில் ரூ.37 கோடி மதிப்பில் கண்ணாடி இழை பாலம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டது. இதை கடந்த டிசம்பர் 30-ந்தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.


இதைத் தொடர்ந்து கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள், திருவள்ளுவர் சிலையினை கண்டுகளிப்பதோடு, கண்ணாடி இழை பாலம் வாயிலாக நடந்து சென்று கடலின் அழகினை கண்டு மகிழ்ச்சி அடைகின்றனர். அத்துடன், கண்ணாடி இழை பாலத்தில் நடந்து சென்று செல்பி எடுப்பதில் சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


இந்த நிலையில், கண்ணாடி பாலத்தில் ஒரு இடத்தில் சிறிய விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்தனர். இதனை தொடர்ந்து, கண்ணாடி பாலத்தில் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது, விரிசல் அடைந்துள்ள கண்ணாடியை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.


இந்த நிலையில், கண்ணாடி பாலத்தில் விரிசல் ஏற்பட்டது தொடர்பாக மாவட்ட கலெக்டர் அழகு மீனா விளக்கமளித்துள்ளார். கண்ணாடி பாலத்தில் பெயின்ட் அடிக்கும் பணியின்போது சுத்தியல் விழுந்ததில் சிறிய கீறல் மட்டுமே ஏற்பட்டதாகவும், அதனை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் கண்ணாடி பாலம் உறுதியாக உள்ளது என்றும், சுற்றுலா பயணிகள் அச்சப்படத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%