
பாபநாசம், செப். 6-
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வ.உ.சி பேரவை சார்பில், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 154 ஆவது பிறந்தநாள் விழா நடந்தது. பாபநாசம் நகரத் தலைவர் ராமராஜ் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் சாமிநாதன், நகரப் பொருளாளர் கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில பொதுச் செயலர் மைதீன் சாமிநாதன் பங்கேற்று வ.உ.சிதம்பரம் பிள்ளை உருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். இதில் மாநில துணைப் பொதுச் செயலாளர் சூரியகுமார், லயன்ஸ், ரோட்டரி சங்க நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%