
பாட்டுக்கொருப் புலவன் பாரதி தமிழ்நாடு கண்ட பாரதி
கூட்டுக்களியினிலே கவிதைகள் கேட்டவராம்
காணி நிலம் வேண்டி பராசக்தியை பணிந்தவர்
அச்சம் என்பதை துச்சமெனச் சொல்லி
பாரத சமுதாயம் வாழ்கவென்றார்
கிடைக்காதச் சுதந்திரத்தைக் கிடைத்ததாக
ஆடிப்பாடி ஆனந்தம் கொண்டாடியவர்
அடுப்பூதும் பெண்களை அலுவலகம் காணச்செய்து
சாதிகள் இல்லை எல்லோரும் ஓர் குலமெனச் சொல்லி
சிறுவர் முதல் யாவருக்கும் பாட்டெழுதி
கண்ணம்மாவைக்
கனிந்து குழைந்து காதலித்து
பாஞ்சாலி சபதம் பாரெங்கும் அறியச் செய்து
இளம் வயதில் இறைவனடிச் சேர்நதாலும்
இயற்றியவை என்னவோ எண்ணில் அடங்காதவை
எதையும் விடாது கவிதையாக எழுதி எழுதி
சுதந்திர தாகம் ஊற்றி உணர்ச்சிப் பெருக்கி
உள்ளும் புறமும் தாய்நாட்டுச் சிந்தனைதானே!
சாதிக்கப் பிறந்து சாதித்து மகழ்ந்த சரித்திர நாயகன்!
வி.பிரபாவதி
மடிப்பாக்கம்
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?