கரூர் சம்பவம்: உச்சநீதிமன்ற நீதிபதி குழு விசாரணை

கரூர் சம்பவம்: உச்சநீதிமன்ற நீதிபதி குழு விசாரணை


கரூர்: கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் குறித்து விசாரணை நடத்த உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோக்கி தலைமையிலான மேற்பார்வை குழுவினர் திங்கள்கிழமை கரூருக்கு வருகை தந்தனர். கோவை விமான நிலையத்திலிருந்து வந்த குழுவினர் ஏற்கனவே விசாரணையில் ஈடுபட்டிருந்த சிபிஐ அதிகாரிகளு டன் ஆலோசனை நடத்தினர். உயிரிழந்த மற்றும் காய மடைந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து விசா ரணை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. டிஐஜி அதுல்குமார் தாகூர் திங்கள்கிழமை கரூரில் சிபிஐ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின் சம்பவம் நடை பெற்ற வேலுச்சாமிபுரத்திற்கு சென்று ஆய்வு செய்தார். முன்னதாக மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் மற்றும் கரூர் வருவாய் கோட்டாட்சியர் முகமது பைசல் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோக்கி தலைமையி லான குழுவினரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%