நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் 9.86 லட்சம் பேர் பயன்
Dec 04 2025
25
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் செயல் பாடுகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டார். முகாம்களுக்கு வரும் மக்களுக்கு குடிநீர், இருக்கை வசதி கள், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதி கள் செய்து தரப்படுவதை உறுதி செய்திட வேண்டும். வழிகாட்டுதல் வழங்க போது மான அளவு தன்னார்வலர்களை நியமிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறி வுறுத்தினார். முகாம்கள் நடைபெறுவது குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விளம்பரம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்கு தனியாக அறை ஏற்படுத் திட வேண்டும். முதியோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய வசதிகளை செய்து தர வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் மாநி லம் முழுவதும் இதுவரை 632 முகாம்கள் நடத்தப்பட்டு 9,86,732 பேர் பயனடைந்து உள்ளனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?