கரூர் மாவட்டம் மண்மங்கலத்தில் 16 பேருக்கு நலத்திட்ட உதவி: செந்தில்பாலாஜி வழங்கினார்

கரூர், ஆக. 21–
கரூர் மாவட்டம் மண்மங்கலம் வட்டம் நன்னியூர் மற்றும் புஞ்சை கடம்பன்குறிச்சி ஆகிய ஊராட்சிகளுக்கு துவரப்பாளையம் சமுதாயகூடத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி எம்எல்ஏ கலெக்டர் தங்கவேல் தலைமையில் 16 பேருக்கு ரூ. 23.10 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் அவர் தெரிவித்ததாவது,
கரூர் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமானது 179 இடங்களில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு ஆகஸ்ட் 19 வரை 66 முகாம்கள் நிறைவு பெற்றுள்ளது. இம்முகாம்கள் மூலம் இதுவரை 53,564 மனுக்கள் வரப்பெற்றுள்ளன. இதில் 19,705 மனுக்கள் கலைஞர் உரிமைத் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள். சில மனுக்களுக்கு சில நிமிடங்களில் அந்த முகாம்களிலேயே தீர்வு அளிக்கப்படுகிறது. ஒரு சில மனுக்களுக்கு ஒரு வார காலம் எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அனைத்து மனுக்களுக்கும் 45 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதலமைச்சர் ஆணைகளை வழங்கியுள்ளார்கள். முதலமைச்சரின் ஆணைக்கிணங்க 45 நாட்களுக்குள் அனைத்து மனுக்களுக்கும் தீர்வு காண மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கலெக்டர் தலைமையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
இம்முகாமில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வீ.ரெ.வீரபத்திரன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சரவணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) தேன்மொழி, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி.) பிரகாசம், வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?