விநாயகர் சதுர்த்தி விழா: மேட்டுப்பாளையத்தில் இந்து அமைப்புகளுடன் போலீசார் ஆலோசனை

மேட்டுப்பாளையம், ஆக. 21–
விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு தமிழக முழுவதும் இந்து அமைப்புகள் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து 3 ஆம் நாளன்று ஊர்வலமாக சென்று சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம்.
இந்நிலையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணியின் கோவை கோட்ட செயலாளர் ராஜ்குமார், வடக்கு மாவட்ட செயலாளர் சதீஷ் குமார், துணைத் தலைவர் தங்கவேலு உள்ளிட்ட நிர்வாகிகளுடன் மாவட்ட கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின்படி, மேட்டுப்பாளையம் துணை கண்காணிப்பாளர் அதியமான் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் சின்னகாமணன், உதவி ஆய்வாளர் ஆனந்தகுமார், போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் பாபு உள்ளிட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய கோவை கோட்ட செயலாளர் ராஜ்குமார் ஆகஸ்ட் 27 ம் தேதி அதிகாலை 5 மணிக்கு பேருந்து நிலையம் அருகில் உள்ள ஸ்ரீசக்தி விநாயகர் கோயிலில் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட உள்ளது.
மேட்டுப்பாளையம் நகரப்பகுதிகளில் 76 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளதாக தெரிவித்தார்.
இந்து முன்னணி சார்பில் 76 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளதாகவும், 3 1/2 அடி முதல் 9 1/2 அடி வரை சிலைகள் வைக்கப்பட உள்ளதாகவும், 27 ம் தேதி அதிகாலை 5 மணிக்கு விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, 3 ம் நாள் 29 ந்தேதி கரைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், சிலைகளை கரைக்க உள்ள பகுதியான சுப்ரமணியர் கோயில் அருகே உள்ள பவானியாற்றங்கரையோம் மின்விளக்குகள் ஏற்பாடு செய்து தரவேண்டும் என்றும் காவல் துறையினரிடம் கோரிக்கை வைத்தார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?