கலெக்டரிடம் மாணவர்கள் வாழ்த்து

கலெக்டரிடம் மாணவர்கள் வாழ்த்து

 பெரம்பலூர், அக்.25-

 உலக விண்வெளி வார விழாவினையொட்டி பெரம்பலூர் சீனிவாசன் பல்கலைகழகத்தில் பேச்சுப்போட்டி, வினாடி வினா மற்றும் ஓவியப்போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடந்தன.இதில் அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

அதில், கீழப்பழுவூர் அரசு மாதிரிப்பள்ளியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி என்.காவியா இளையோர் பிரிவு பேச்சுப்போட்டியில் முதல் பரிசும், 10-ம் வகுப்பு மாணவி மு.மிருதுளா மேலோர் பிரிவு பேச்சுப்போட்டியில் 2-ம் பரிசும் பெற்றனர்.

இதேபோன்று தனியார் பள்ளியை சேர்ந்த பிளஸ்2 மாணவன் உ.ராகுல் ஓவியப்போட்டியில் முதல் பரிசும், 9-ம் வகுப்பு மாணவி அ.எஸ்தர் கேத்தரின் 2-ம் பரிசும், வினாடி வினாப் போட்டியில் பிளஸ்2 மாணவர்கள் பா.பிரதீஸ்ராஜ், பொ.மு.நபி, பி.அட்சயா ஆகியோர் 2-ம் பரிசும், பேச்சுப்போட்டியில் பிளஸ்2 மாணவி செ.பி.பியாசென் 2-ம் பரிசும் பெற்றுள்ளதை தொடர்ந்து அனைவரும் மாவட்ட கலெக்டர் .ரத்தினசாமியை, நேற்று சந்தித்து தாங்கள் பெற்ற விருதுகள், பாராட்டுச் சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்துப்பெற்றனர்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொருப்பு) பாலசுப்ரமணியன், மாவட்ட கல்வி அலுவலர் சித்ராதேவி, பள்ளி தலைமையாசிரியர்கள் கலந்துகொண்டனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%