கழுதூர் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கல்லூரியில் ஓவிய போட்டி

கழுதூர் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கல்லூரியில் ஓவிய போட்டி

கழுதூர் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கல்லூரியில் ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கல்லூரி தாளாளர் சி.வெ.க.வெங்கடேசன் 1 லட்சத்து 20 ஆயிரம் பரிசு தொகை வழங்கினார்.


கடலூர், டிச.21-


கழுதூர் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கல்லூரியில் ஓவிய போட்டி நடந்தது.


கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள கழுதூர் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கல்லூரியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஓவியப் போட்டி நடைபெற்றது. இதில் மாணவ- மாணவிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு ஆர்வமுடன் ஓவியங்கள் வரைந்தனர். சிறப்பு விருந்தினராக ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரி தாளாளரும் கடலூர் மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் சி.வெ.க.வெங்கடேசன் கலந்து கொண்டு ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற 15 மாணவர்களுக்கு ரூபாய் 1 லட்சத்து 20 ஆயிரம் பரிசு தொகை மற்றும் மாணவ-மாணவிகளுக்கு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%