காட்டாம்பூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு பிரம்மாண்டமாக நடைபெற்ற கும்பாபிஷேக விழா! சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

காட்டாம்பூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு பிரம்மாண்டமாக நடைபெற்ற கும்பாபிஷேக விழா!    சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு!



திருப்பத்தூர்


சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே காட்டம்பூர் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ தர்மபுல்லணி அய்யனார் கோயில். இக்கிராமத்தின் காவல் தெய்வமாக விளங்கிவரும் ஸ்ரீ தர்ம புல்லணி அய்யனார் கிராம மக்களின் பஞ்சம் போக்க தான்தோன்றியதாக கூறப்படுகிறது. நூற்றாண்டுகளைக் கடந்து இன்றும் இக்கிராம மக்கள் பயபக்தியோடு அய்யனாரை வணங்கி வருகின்றனர். முன்பு இந்த அய்யனாருக்கு புரவிகள் எடுத்தும், முளைப்பாரிகள் சுமந்தும் விழா எடுத்து வந்த கிராம மக்கள் ஒவ்வொரு ஆண்டும் சிவன்ராத்திரி விழாவை மிகப் பிரம்மாண்டமாக கொண்டாடி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு ஓட்டு கொட்டகையில் இயங்கி வந்த அய்யனாருக்கு ஆலயம் எழுப்ப முடிவு செய்த கிராமத்தினர், தற்பொழுது 68 சிலைகளுடன் ராஜகோபுரமும், 84 சிலைகளுடன் மூலவர் கோபுரமும் அமைத்து, புதுப்பொலிவுடன் பிரம்மாண்டமாக கட்டியுள்ளனர். 25 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இப்பணிகள் நிறைவுற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. நூற்றாண்டுகளைக் கடந்து கிராமத்தை காத்து வரும் அய்யனாருக்கு குடமுழுக்கு விழா நடத்துவது என்பது இக்கிராம மக்களின் மிகப்பெரும் கனவாகவே அமைந்திருந்தது. இக்கும்பாபிஷேக விழா கடந்த ஆக 29ம் தேதி தொடங்கி கோலாலமாக நடைபெற்றது. கடந்த செப் 1ம் தேதி மாலை முதல் கால யாகசாலை பூஜையை தொடங்கியது தொடர்ந்து செப்; 2ம் தேதி, இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜை நடந்தது. செப் 3ம் தேதி, நான்காம் மற்றும் ஐந்தாம் கால யாகசாலை பூஜையும், அன்று இரவு மூலவர் ஸ்ரீ தர்மபுல்லணி அய்யனார் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளில் உள்ள தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதலும் நடந்தது. செப்: 4ம் தேதியான நேற்று காலை 6ம் கால யாகசாலை பூஜை, மகா பூர்ணாஹூதியுடன் நிறைவடைந்து, தீபாராதனை காட்டப்படுகிறது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து சிவாச்சாரியார்கள், கிராமத்தார்கள் புனித நீர் கடத்தினை தலையில் சுமந்து கோவிலை சுற்றி வலம் வந்து, கோபுர விமானத்திற்கு கொண்டு சென்று மூலவர் கோபுரம், ராஜகோபுரம், பரிவார தெய்வங்களின் கோபுரங்கள், இரண்டு பிரமாண்ட குதிரைகள் ஆகியவைகளுக்கு காலை 10 மணிக்கு பிள்ளையார்பட்டி, விகாஸ் ரத்னா, டாக்டர் சிவஸ்ரீ கே.பிச்சைகுருக்கள் தலைமையில், சிவாச்சாரியார்களால் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் கிராமத்தார்கள் முன்னிலையில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. நூற்றாண்டை கடந்து அருள் பாலித்து, காத்து வரும் ஸ்ரீ தர்ம புல்லணி அய்யனார் கோவிலுக்கு, பல ஆண்டுகளாக எதிர்பார்ப்போடு காத்திருந்த கிராம மக்கள் நடத்தும், குடமுழுக்கு விழாவிற்கு வெளியூர் வெளிநாடுகளில் வசிக்கும் இக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் கிராமங்களுக்கு 10 நாட்களுக்கு முன்பே வந்து விழாவை சிறப்பித்தனர். இக்கோயில் கும்பாபிஷேகம் இக்கிராமத்தார்கள் மட்டுமின்றி சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு அய்யனின் அருள் பெற்று சென்றனர். விழா துவங்கிய நாளிலிருந்தே ஒவ்வொரு நாளும் பாட்டு கச்சேரி, கிராமிய நிகழ்ச்சி, இசை நிகழ்ச்சி, பட்டிமன்றம், இன்னிசை நிகழ்ச்சி, ஆன்மீக சொற்பொழிவு, நாடகம் என பல்சுவை நிகழ்ச்சிகள் விழா மேடையில் அரங்கேற்றம் செய்தனர். பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் அன்னதானமும் நடைபெற்றது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%