காதலர் தினத்துக்காக

காதலர் தினத்துக்காக

காதலர் தினத்துக்காக

கவிதையொன்றை கேட்டாள்

அழகான இராட்சசி ஒருத்தி

நேரம் தவறி

அவள் விடுத்த 

குறுந்தகவலை காண நேரிட்டது

கொடுக்காத கவிதைக்காக

கொஞ்சம்

கோபம் தான் கொண்டிருப்பாள்

அவளிடம் எப்படி சொல்ல?

வருடத்தில் ஒரு நாளா

காதலர் தினம்.

அவளை காதலியாய்

வரமாய் பெற்ற

அவன் காதலனிடம்

சொல்லி விடுங்கள்

தமிழின் இலக்கண,இலக்கியங்கள்

நிறைந்திருக்கும்

அகராதிகளுக்கெல்லாம்

கவிதைகள் எதற்கு?

இவ்வளவு சொல்லியும்

கவிதை தான் வேண்டுமென்றால்

ஒரு கண்ணாடி 

அவளிடம் கொடுங்கள்

பிரதிபலிக்கும்

நிலவின் கவிதையாய்

அவள் முகம்

கொஞ்சம் வயிற்றெரிச்சலோடு சொல்கிறேன்

தேவதைகளை வரமாய் பெற்றவர்களுக்கு

கவிதைகளெல்லாம்

தேவைப் படாது!


-லி .நௌஷாத் கான் -

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%