சிலரது கொள்கை முடிவுகள் குழப்பம் தருகிறது.

சிலரது கொள்கை முடிவுகள் குழப்பம் தருகிறது.



முடிவினை அவர்கள் எடுக்கிறார்கள் அதனை நம் வாயால் நம்மையே சொல்லவும் வைக்கிறார்கள் 


இதனை அவர்களது புத்திசாலித்தனம் உள்ளதா நமது முட்டாள் தனம் என்பதா 


சில நேரங்களில் நன்மை நடப்பது போலத்தான் தெரிகிறது ஆனால் அதன் முடிவில் அது நமக்கான ஆப்பு என்பது அறியாமல் போய் விடுகிறது 


உங்கள் கொள்கையை சுயநலம் என ஆனபின் அதில் மற்றவர் நலனை எதிர்பார்ப்பது அறிவீனம் தான் 


 உடலெங்கும் காயங்கள் மனதெங்கும் ஆறாத அதன் ரணங்கள்


முகத்திற்கு ஒரு வகை முகமூடி 

என்றால் ஆயுதங்களுக்கும் முகமூடி 


ஆயுதங்கள் பல விதமாய் உள்ளது அன்பினை தடவி பூவால் அலங்கரித்து இதயத்தில் பாயும் இனிய ஆயுதங்களால் தான் அதிக ஆபத்து.

--- 

ஜனனி அந்தோணி ராஜ் திருச்சிராப்பள்ளி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%