சென்னையில் டிபிஐ வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்த பேரணியாக சென்ற ஆசிரியர் களை காவல்துறையினர் கைது செய்தனர். பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை சரிசெய்ய வேண்டும். கட்டாய கல்வி உரிமைச் சட்டம் -2009 வருவதற்கு முன்பு நியமனம் பெற்றவர்களுக்கு தகுதி தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். இச்சட்டத்தின் 23 ஆவது பிரிவை திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதன்படி எழும்பூரில் இருந்து தொடக்கக் கல்வி இயக்குநரகம் அமைந்துள்ள டிபிஐ வளாகம் நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற ஆசிரியர்களை காவல்துறையினர் தடுத்து கைது செய்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செய லாளர் ச.மயில் கூறுகையில், “ஆசிரியர்களை போராட் டத்தில் பங்கேற்கவிடாமல் முன்கூட்டியே கைது செய்தும், வீட்டுக் காவலிலும் காவல்துறையினர் வைத்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். பறிக்கப்பட்ட உரிமைகளை திரும்ப கேட்கிறோம். 12 அம்ச கோரிக்கைகளை அமைச்சர் ஏற்றுக் கொண்டுள்ளார். 4 கோரிக்கைகளுக்கு உடனடியாக அரசாணை வெளியிடுவதாக அமைச்சர் கூறினார். ஒரு அரசாணைகூட வெளியிடவில்லை. கூட்டு நட வடிக்கைக் குழு தலைவர்களை அழைத்துப் பேசி, ஏற்றுக்கொண்ட கொள்கைகளை நிறைவேற்ற வேண்டும்” என்றார். அரசு ஊழியர் சங்கம் கண்டனம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.பாஸ்கரன், பொதுச் செயலாளர் வெ. சோமசுந்தரம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக் கையில், “ஆசிரியர்களை முன்கூட்டியே வீட்டுக் காவ லில் வைத்துள்ள காவல்துறையின் நடவடிக்கை வன்மையாக கண்டனத்திற்குரியது. கூட்டமைப்பு நிர்வாகிகளை அரசு அழைத்துப் பேசி கோரிக்கை களை நிறைவேற்றாமல், காவல்துறையை ஏவுவது கண்டனத்திற்குரியது” எனக் கூறப்பட்டுள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?