காரமடையில் தேசிய திறனறி தேர்வு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு
Dec 11 2025
14
கோவை மாவட்டம் காரமடை ஒன்றியம், லிங்காபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் என்.எம்.எம்.எஸ்.தேர்வு குறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறன்வழி தேர்வுகள் நடைபெறுகிறது.
இந்தத் தேர்வில் ஏழாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பாடப் பகுதிகள் இடம் பெறுகின்றன. படிப்பறிவுத் திறன், மனத்திறன் ஆகிய இரு பகுதிகளை உள்ளடக்கிய இத்தேர்வு 180 மதிப்பெண்களைக் கொண்டது. இதற்கென மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற வைக்கும் நோக்கத்துடன் லிங்காபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பல்வேறு பயிற்சி முறைகள் மற்றும் சிறப்பு வகுப்பு நடைபெற்று வருகிறது.
அதன் தொடர்ச்சியாக இத்தேர்வு எழுதக்கூடிய மாணவ மாணவியரின் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
தேர்வு எழுதக்கூடிய மாணவர்கள் கைபேசி, தொலைக்காட்சி ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது. உடல் நலனின் கவனம், வீட்டுப் பாடத்தை கவனித்தல், வருகை பதிவின் முக்கியத்துவம், இத்தேர்வில் தேர்ச்சி பெற்றால் ஆண்டுக்கு 12 ஆயிரம் வீதம் நான்காண்டுகளுக்கு 48 ஆயிரம் கிடைக்கும் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் பள்ளியின் தலைமையாசிரியர் கஜலட்சுமி என்.எம்.எம்.எஸ் ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார், பாட ஆசிரியர்கள் ஆறுமுகம் மற்றும் ராஜாமணி ஆகியோர் கலந்து கொண்டு அறிவுரை வழங்கினர்.
-----------
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?