பழனி முருகன் மலைக் கோவிலில் ரூ.4 கோடியில் வெள்ளித் தகடு பதிக்கும் பணி

பழனி முருகன் மலைக் கோவிலில் ரூ.4 கோடியில் வெள்ளித் தகடு பதிக்கும் பணி

அமைச்சர்கள் சக்கரபாணி, சேகர் பாபு தொடங்கி வைத்தனர்



பழனி முருகன் மலைக்கோவிலில் ரூ. 4 கோடி செலவில் வெள்ளி தகடு பதிக்கும் பணியை அமைச்சர்கள் அர.சக்கரபாணி, பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தனர்.


பழனி திருஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில் நேற்று குடமுழுக்கு நடந்தது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கலந்து கொண்டனர். அதன் பின்பு பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான பள்ளி கல்லூரி விடுதி மாணவ மாணவியருக்கு, கட்டணமில்லா உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.


வெள்ளித் தகடு பதிக்கும் பணி:


அதேபோல் மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார். மாணவர்களுக்கு இலவச கண் பரிசோதனை திட்டத்தை தொடங்கி வைத்தனர். அதன் பின்பு பழனி அடிவாரத்தில் ரோப் கார் மின்னிலுவை ரயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் கட்டணமில்லாமல் செல்லும் திட்டத்தை தொடங்கி வைத்தனர். பின்னர் பழனி முருகன் கோவிலுக்கு சென்று அங்கு மூலவர் சன்னதியில் ரூ.4 கோடி செலவில் வெள்ளித் தகடுகள் பதிக்கும் பணியை அமைச்சர்கள் அர.சக்கரபாணி சேகர் பாபு ஐபி செந்தில்குமார் எம்எல்ஏ தொடங்கி வைத்தனர்.


இதற்கான நிகழ்ச்சியில், அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், கலெக்டர் சரவணன், அறங்காவலர் குழு தலைவர் கே. எம். சுப்பிரமணியம், அறங்காவலர்கள் தனசேகர், ஜி. ஆர். பாலசுப்பிரமணியம், பாலசுப்பிரமணி, அன்னபூரணி, மற்றும் நகர மன்ற துணைத் தலைவர் கந்தசாமி, நகர திமுக செயலாளர் வேலுமணி, இளைஞரணி அமைப்பாளர் லோகநாதன், துணை ஆணையர் வெங்கடேசன், உதவி ஆணையர் லட்சுமி உட்பட ஏராளமான பங்கேற்றனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%