கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு கடத்திவரப்பட்ட அரியவகை ஆமைகள், உடும்புகள் பறிமுதல்: ஒருவர் கைது
Dec 11 2025
21
கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட அரியவகை ஆமைகள், உடும்புகளை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த விமானத்தில் அரியவகை விலங்குகள் கடத்தி வரப்படுவதாக சுங்கத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருச்சிக்கு வந்த மலேசியா விமானத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
ஒருவர் கைது:
அப்போது, ஆண் பயணி ஒருவர் இரண்டு பிளாஸ்டிக் பெட்டிகளில் 34 வெண்பிறவி சிவப்பு காது அமைகள் (அல்பினோ ரெட் இயர்டு ஸ்டலைடர்), 3 அல்பினோ ரக்கூன்ஸ் (வெண்பழுப்பு அணில் கரடி) மற்றும் 13 பச்சை நிற உடும்பு ஆகியவற்றை கோலாலம்பூரில் இருந்து தனது உடைமையில் மறைந்து கடத்திவந்தது தெரியவந்தது.
மேலும், கடத்திவரப்பட்ட உடும்பில் ஒன்று பிளாஸ்டிக் பெட்டியிலேயே உயிரிழந்திருந்தது. இதையடுத்து, அவற்றைப் பறிமுதல் செய்த சுங்கத் துறை அதிகாரிகள், அரிய வகை விலங்குகளை கடத்தி வந்த நபரை வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?