கூத்தாநல்லூர் அருகே ரூ.8 லட்சத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் புனரமைப்பு: சமூக ஆர்வலருக்கு மக்கள் பாராட்டு

கூத்தாநல்லூர் அருகே ரூ.8 லட்சத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் புனரமைப்பு: சமூக ஆர்வலருக்கு மக்கள் பாராட்டு



திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்காக ரூ.8 லட்சம் செலவில் புனரமைப்பு செய்த சமூக ஆர்வலருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அடுத்த வடபாதிமங்கலம் அருகே உள்ள சாத்தனூர் என்ற கிராமத்தில் ஏழை, எளிய நடுத்தர மக்கள் வசிக்கும் பின்தங்கிய கிராமமாகும். இந்த கிராமத்தைச் சேர்ந்த ராஜகோபால் என்பவர், கிராம மக்கள் நலனுக்காக பல திட்டங்களை தனது சொந்த நிதியிலிருந்து செய்து வருகிறார்.


ராஜகோபால அய்யர் சென்னையில் வசித்தாலும், தனது பிறந்த மண்ணான சாத்தனூர் கிராமத்திற்கு என திருமண மண்டபம், 1987 ஆம் ஆண்டு மீனாட்சியம்மாள் என்ற பெயரில் மருத்துவமனை கட்டிடம், செவிலியர்களுக்கான குடியிருப்பு கட்டிடம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் பிளான்ட் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை இன்றும் தனது குடும்பத்தினர் பங்களிப்போடு செய்து வருகிறார். மேலும், சாத்தனூர் கிராமத்தில் மீனாட்சி அம்மாள் என்ற பெயரில் செயல்பட்டு வந்த தனது மருத்துவமனையை அரசின் வேண்டுகோளின் படி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்காக வழங்கினார்.


ரூ.8 லட்சத்தில் புனரமைப்பு:


அந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையக் கட்டிடத்தை பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்திருந்தது. இத்தகவல் அவருக்கு தெரிய வந்த உடன் ரூ.8 லட்சம் நிதியில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை மறுசீரமைப்பு செய்ய நடவடிக்கை மேற்கொண்டார். மறு சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், புதுப்பிக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை, ராஜகோபால் முன்னிலையில் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் சங்கீதா மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.


இதுகுறித்து ராஜகோபால் கூறும்போது, கிராமத்திற்கு மக்களின் ஒத்துழைப்போடு குளம் வெட்டிக் கொடுத்தேன். ப்ரீசர் வாங்கி கொடுத்துள்ளேன். இதுவரை ரூ. 50 லட்சம் அளவிற்கு செய்துள்ளதில் பெருமை அடைகிறேன். சாத்தனூர் கிராம மக்களுக்காக இன்னும் நான் செய்து கொண்டிருப்பேன் என்றார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%