
ஆகஸ்ட் 13-இல் கியூபாவின் மருத்துவ குழுக்களைப் பயன்படுத்திய பிரேசில், கனடா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் அதிகாரிகள் மீது விசாத் தடைகள் விதிக்கப்போவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ அறிவித்துள்ளார். மற்ற நாடுகளில் கியூபாவின் மருத்துவர்கள் பணிபுரிவது “கட்டாய உழைப்பு” என்று ரூபியோ குறிப்பிட்டுள்ளார். 1960-களிலிருந்து கியூபாவின் மருத்துவ குழுக்கள் செயல்படத் தொடங்கின. பிரான்சிடமிருந்து அல்ஜீரியா விடுதலை பெற்ற பின்னர், பிரெஞ்சு மருத்துவர்கள் வெளியேறியதால் அங்கு கியூபாவின் முதல் மருத்துவக் குழு சென்றது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் இத்தாலி உட்பட டஜன் கணக்கான நாடுகளுக்கு சென்று கியூபாவின் மருத்துவர்கள் செய்த பணி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 24,000 கியூபாவின் மருத்துவ ஊழியர்கள் பல நாடுகளில் இலவச மருத்துவ சிகிச்சைகளை வழங்கி வருகின்ற னர். அமெரிக்க பொருளாதாரத் தடை களால் பாதிக்கப்பட்ட கியூபாவிற்கு வரு மானத்திற்கான முக்கிய வழிகளில் மருத்து வக் குழுக்கள் மூலம் பெறப்படும் நிதியும் ஒன்று. வெளிநாடுகளுக்கு மருத்துவ உதவி குழுக்களை அனுப்பும் திட்டத்தை பல்வேறு இன்னல்களுக்கு மத்தியிலும் நிறுத்தப்போவதில்லை என்று கியூபா அரசு அறிவித்துள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?