
மலேசியா சோசலிஸ்ட் கட்சி யும் விவசாய சொசைட்டி ஆதரவுக் குழுவும் உருவாக்கியுள்ள “அனைத்து தோட்டத் தொழிலாளர் களுக்கான பொது வீட்டு வசதித் திட்டம்” என்ற மசோதாவை தயாரித்துள்ளன. ஆகஸ்ட் 13-இல் நூற்றுக்கணக் கான மலேசிய தோட்டத் தொழிலா ளர்கள் பங்கேற்று மலேசியா சோசலிஸ்ட் கட்சி தலைமையில் கோலாலம்பூரில் உள்ள நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தினர். சோசலிஸ்ட் கட்சித் தலைவர்களையும் சொசைட்டி உறுப்பினர்களையும் நாடாளு மன்றம் சென்றடைவதை போலீஸ் தடுக்க முயற்சித்தது. மலேசியா முழுவதும் ரப்பர், பாமாயில், தேயிலை மற்றும் காபித் தோட்டங்களில் பல லட்சக்கணக்கான தொழிலாளர் கள் பணிபுரிகின்றனர். பெரும்பாலானோ ருக்கு குறைந்த கூலிதான். முதலாளிகள் வழங்கும் வீடுகளில் தோட்டத் தொழிலாளர்கள் வசிக்கின்றனர். ஆனால் ஓய்வுபெற்றா லோ பணி நீக்கம் செய்யப்பட்டாலோ வீடுகளைக் காலி செய்ய வேண்டும்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?