இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே சனிக்கிழமை அதிகாலை நின்று கொண்டிருந்த கார் மீது, மற்றொரு கார் வேகமாக வந்து மோதியதில் 5 பேர் உயி ரிழந்தனர். 7 பேர் படுகாயமடைந்தனர். ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 5 பேர் இராமேஸ்வரம் செல்லும் வழியில், கீழக்கரை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு ஹோட்டல் முன்பு காரை நிறுத்தி விட்டு தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, ஏர்வாடியில் இருந்து 7 பேருடன் வந்த சொகுசுக் கார் அதிவேகத்தில் மோதியது. இதில், நின்று கொண்டிருந்த காரில் இருந்த ஆந்திராவைச் சேர்ந்த ராமச்சந்திர ராவ் (55), அப்பாரோ நாயுடு (40), பண்டார சந்திரராவ் (42), ராமர் (45) ஆகிய மூவர் சம்பவ இடத்திலும், ஒருவர் மருத்துவ மனையில் சிகிச்சை பலன் இன்றியும் உயி ரிழந்தனர். மேலும் கீழக்கரையைச் சேர்ந்த சொகுசு கார் ஓட்டுநர் முஷ்டாக் அகமது (30) மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழி யில் உயிரிழந்தார். மேலும், கீழக்கரையைச் சேர்ந்த 6 பேர், ஆந்திராவைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 7 பேர் பலத்த காயங்களுடன் இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கீழக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண் டுள்ளனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?