டிச. 11 விசைத்தறி தொழிலாளர்கள் மாநிலந் தழுவிய ஆர்ப்பாட்டம்
Dec 08 2025
21
தமிழ்நாடு விசைத்தறித் தொழிலாளர் மாநில சம்மேளனக்குழு கூட்டம், திருப்பரங்குன்றம் கே.பி. ஜானகியம்மாள் நினைவரங்கத்தில் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் ஆர். சோமசுந்தரம் தலைமை வகித்தார். சிஐடியு மாநிலத் துணைத் தலைவர் எம். சந்திரன், சம்மேளன மாநிலப் பொதுச் செயலாளர் பி. முத்துசாமி, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் பல்லா யிரக்கணக்கான தொழிலாளர்கள் விசைத்தறி தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் குடும்பங்களின் பிரதான வருவாய் ஆதாரம் விசைத்தறி தொழிலே ஆகும். கூலி உயர்வு கோரிக்கையை முன்வைத்து கடந்த 19.11.2025 முதல் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டம் ஆகியவற்றை நடத்தி வருகின்றனர். 17 நாட்களாக வருமானமின்றி போராடி வரும் விசைத்தறி தொழிலாளர்களின் நிலைமை மிகக்கடுமையாக உள்ளது. எனவே, தொழிலாளர்கள் முன்வைத்த நியாய மான கூலி உயர்வு கோரிக்கைக்கு உடனடி தீர்வு காண தமிழக அரசு மற்றும் தொழிலாளர் துறை அவசர தலையீடு செய்ய வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மேலும், தொழிலாளர் விரோதச் சட்டங்களை இயற்றி அமலாக்கி வரும் ஒன்றிய அரசை கூட்டம் கடுமையாக கண்டித்தது. போராடும் விசைத்தறி தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும் கூலி உயர்வு வழங்கக்கோரியும் டிசம்பர் 11 அன்று மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களி லும் விசைத்தறி தொழிலாளர் சங்கங்களின் ஒருங்கி ணைந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று முடிவு செய்யப் பட்டுள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?