கீழவாசல் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கீழவாசல் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தஞ்சாவூர், ஆக. 23-

தஞ்சை கீழவாசல் பகுதியில், 20 கடைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி மாநகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தஞ்சை மாநகரில் வர்த்தக நிறுவனங்கள் அதிகம் நிறைந்த கீழவாசல் பகுதியில், சரபோஜி மார்க்கெட், பாத்திரக்கடைகள், மளிகை கடைகள், அரிசி கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் இயங்கி வருகின்றன. இதில், கீழவாசல் சாலை மற்றும் ஆட்டுமந்தைத் தெரு, கொள்ளுப்பேட்டை தெரு செல்லும் சாலையில் உள்ள சில கடைகளின் முன்பு ஆக்கிரமிக்கப்பட்டு கொட்டகை மற்றும் சிமெண்டு தளம் அமைக்கப்பட்டு இருந்தது. இதனால் வாகனங்கள் செல்லும்போது அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று மாநகராட்சிக்கு புகார்கள் வந்தன. மாநகராட்சி ஆணையர் கண்ணன் உத்தரவின் பேரில், மாநகராட்சி அலுவலர்கள் வெள்ளிக்கிழமை ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பொக்லைன் இயந்திரம் உதவியுடன் மாநகராட்சி அலுவலர்கள் ஆக்கிரமித்து போடப்பட்டு இருந்த கொட்டகைகளை அகற்றியதோடு, கடைகளின் முன்பு ஆக்கிரமித்து போடப்பட்டு இருந்த சிமெண்டு தளங்களையும் அப்புறப்படுத்தினர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%