
தஞ்சாவூர், அக். 19- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா, மதுக்கூர் அருகே உள்ள துவரங்குறிச்சி மணியாரன் கொல்லை பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியராஜன்(39. லாரிகளில் தேங்காய் லோடு ஏற்றும் தொழிலாளியான இவர், சனிக்கிழமை இரவு பேராவூரணி அருகே உள்ள உறவினர் வீட்டுக்கு வந்து விட்டு, மோட்டார் சைக்கிளில் துவரங்குறிச்சி செல்லும் வழியில் பள்ளத்தூர் ஆற்றுப்பாலத்தில் அமர்ந்து மது குடித்துள்ளார், அப்போது, அங்கு குடி போதையில் வந்த பள்ளத்தூரைச் சேர்ந்த செந்தில் (33) என்பவர் நீ யார், எந்த ஊர் இங்கு வந்து என்ன செய்கிறாய் எனக் கேட்டுள்ளார். இதனால் இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் அருகில் கிடந்த கட்டையை எடுத்து பாண்டியராஜன் தலையில் செந்தில் தாக்கியுள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே பாண்டியராஜன் பலியானார். இதுகுறித்து, சேதுபாவாசத்திரம் காவல்துறை ஆய்வாளர் தண்டாயுதபாணி வழக்குப் பதிவு செய்து பாண்டியராஜன் உடலை மீட்டு, உடற்கூறாய்வுக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, செந்திலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?