வாலிபரைத் தாக்கிய தனியார் நிறுவனத்தினர் மீது வழக்கு பதிவு

வாலிபரைத் தாக்கிய தனியார் நிறுவனத்தினர் மீது வழக்கு பதிவு



குழித்துறை, அக்.19- லோன் கட்ட தவறியதால் தனியார் நிதி நிறுவனத்தினர் வாலிபரை தாக்கினர். குமரி மாவட்டம், பாகோடு மதிக்காவிளையை சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (37). கூலித்தொழிலாளியான இவர், தனியார் நித நிறுவனத்தில் 3 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் இவரது கை முறிந்தது.இதனால் அவரால் லோன் பணம் கட்ட முடியவில்லை. இந்நிலையில் தனியார் நிதி நிறுவனத்தைச் சேர்ந்த மாங்கோட்டை சேர்ந்த ரெஜிஸ் (23) மற்றும் விஜன் ஆகியோர் சந்தோஷ் குமார் வீட்டிற்குச் சென்று பணம் செலுத்துமாறு கேட்டு தகறாறில் ஈடுபட்டு சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இது குறித்து கொடுத்த புகாரின் பேரில் ரெஜிஸ் மற்றும் விஜயன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%