பெரம்பலூர் அருகே 360 பவுன் நகை மோசடி வழக்கில் தம்பதி கைது
Oct 22 2025
19

பெரம்பலூர், அக். 19- பெரம்பலூர் அருகே 360 பவுன் நகை மோசடியில் ஈடுபட்ட தம்பதியை மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம், லப்பைக்குடிக்காடு ஜமாலியா நகரைச் சேர்ந்தவர் பசீர் அஹமத் மனைவி உம்மல் பஜரியா (53). பசீர் அஹமத் வெளிநாட்டில் வசித்து வருவதால், தனது 3 மகள்கள் மற்றும் ஒரு மகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், அவரது மாடி வீட்டில் பஜிலுல் ரஹ்மான், அவரது மனைவி பர்வீன்பானு ஆகியோர் தனது குழந்தைகளுடன் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் வாடகைக்கு இருந்துள்ளனர். உம்மல் பஜரியாவும், பர்வீன் பானுவும் நெருங்கி பழகியதால், அடிக்கடி பணம் மற்றும் நகை கொடுக்கல் வாங்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 2024 ஆம் ஆண்டு தனது கணவர் பஜிலுல் ரஹ்மான் செய்து வந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், தொழில் செய்வதற்காகவும், அதிலிருந்து கிடைக்கும் வருவாய் மூலம் நகையை திருப்பி கொடுத்துவிடுவதாகவும் கூறி, உம்மல் பஜரியாவிடமிருந்து 360 பவுன் நகையை பர்வீன் பானு பெற்றுள்ளார். நகையை பெற்றுக்கொண்டு திரும்ப கொடுக்கவில்லை என தெரியவருகிறது. நகையை திருப்பித் தர தொடர்ந்து வற்புறுத்தியதால் ஆத்திரமடைந்த பஜிலுல் ரஹ்மான், பர்வீன்பானு, அவர்களது மகள்கள் அப்ரீன் பானு, நஸ்ரீன் பானு, உறவினர் ஹியத் பாஷா ஆகியோர் உம்மல் பஜரியாவை தகாத வார்த்தைகளால் பேசியதோடு, கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் உம்மல் பஜரியா அளித்த புகாரின்பேரில் பெரம்பலூர் மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், பஜ்லுல் ரஹ்மான் (52), அவரது மனைவி பர்வீன் பானு (46) ஆகியோரை மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையினர், புதன்கிழமை இரவு கைது செய்து, குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?