சென்னை, ஆக. 22–
குடும்ப தகராறில் தாயை கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, கொளத்தூர், திருப்பதி தங்கவேல் நகரில் உள்ள வீட்டில் ரூபக் என்பவர் அவரது தாயார் பிரமிளா (60) என்பவருடன் லீசுக்கு வசித்து வந்துள்ளார். ரூபக் என்பவருக்கும் அவரது தாயாருக்கும் அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், சுமார் 3 மாதங்களாக ரூபக் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், ரூபக்கின் தாயார் வசித்து வந்த வீட்டை காலி செய்யுமாறு வீட்டு உரிமையாளர் கூறியதை தொடர்ந்து ரூபக், பெங்களூரிலிருந்து, அவரது வீட்டிற்கு வந்தபோது, ரூபக்கிற்கும் அவரது தாயாருக்கும் வாடகை முன் பணத்தொகை கேட்டு வாக்குவாதம் ஏற்பட்டபோது, ரூபக் ஆத்திரத்தில் அவரது தாய் பிரமிளாவின் தலையை பிடித்து தாக்கியதில், சுவற்றில் மோதி கீழே விழுந்ததால் பிரமிளாவுக்கு தலையில் இரத்தக்காயம் ஏற்பட்டு, பெரியார் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக இராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து மாதவரம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தாயார் பிரமிளா சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். அதன்பேரில், இவ்வழக்கின் சட்டப்பிரிவு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டது. மாதவரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து, தாயாரை கொலை செய்த ரூப (35) என்பவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ரூபக் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?